வெள்ளி, 12 ஜூன், 2020

ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 6


நமது ஞானஸ்கந்தர் ஜீவநாடி யாருக்கு பலன் சொல்லுமோ அவருக்கு நிச்சயம் ஏதாவது
ஒரு வழியில் சொல்லியே தீரும்.

எம்மைத்தொடர்பு கொள்பவர்கள் இதைப் புரிந்து கொண்டு பொறுமை காப்பது அவசியம்.

ஐயா நான் ஒரு வருடமாகத் தொடர்பு கொள்கிறேன் படிக்கவே மாட்டேன் என்கிறீர்கள் எனப்  பலர்  தங்களது கருத்துக்களைச்
சொல்கிறார்கள்.

காரணம் இதுதான். உரிய காலம் வரும்போது படித்தால் தான் உண்மை புலப்படும். இல்லாவிடில்
பலன் நடக்காது.

பொதுவாக, நாடி ஜோதிடம் பார்த்தால் சுமார் பத்தாயிரம் முதல்
இருபதாயிரம் வரை பரிகாரம் சொல்கிறார்கள்.

அதே போல் பிறந்த தேதி,
நேரத்தை வாங்கி அதைக் கொண்டு கணினியில் போட்டு, ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளைக் கொண்டு, மனப்பாடமாகப் பாடல் வடிவில்
சொல்கிறார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஈரோட்டில் இருந்து என்னைப் பார்க்க  வந்த நபர்.

ஒரு சிலர் சொல்கின்ற பலனைக்
கடைபிடிப்பது எப்படி என்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை. இவர் எப்படி பலன் சொல்கிறார்
என்பதை மட்டுமே ஆய்வு செய்து ஜோதிடர்களை சோதனை
செய்வது மட்டுமே பணியாகக் கொள்கிறார்கள்.

அதே போல் தான் நாடி என்ற
பெயரில் நடக்கும் மோசடிகளையும் அறியாதவர் இல்லை.

 நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் நாடியை அதனால்தான் அனைவருக்கும் உரைப்பது  இல்லை.

காரணம் எவருக்கு பிராப்தம் உள்ளதோ அவருக்கே உரைக்கிறோம்.

அதேபோல இதில் வரும் பரிகாரங்களும் பொதுவாக அன்னதானம், சித்தர்கள்
பூஜை, ஜீவ சமாதி வழிபாடு, ஆலய தரிசனம், மணி, மந்திரம், ஔஷதம் என்கிற முறையில்
தான் வருகிறது.

பரிகாரங்கள் எத்தனை தான் செய்தாலும் அது பலிப்பதும். பலிக்காமல் போவதும்,
அவரவர் கர்ம வினையைப் பொறுத்தே அமைகிறது.

அதேபோல் நாடியில் வரும் பலன்களும் அவரவர் கர்ம வினைப்படியே நடக்கிறது என்பதையும் நினைவில்
வைத்துக் கொள்ள வேண்டும்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா!



கட்டுரையாக்கம்: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள், ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் அந்தியூர்.



1 கருத்து:

  1. பொறுத்தால் இரட்சிக்கும் தன்மை உடையவர் முருகபெருமான்...சோதிக்கும் தன்மை இன்றி சரணாகதி தன்மை அடைந்தால் ஊழ்வினையை விரட்டி அடிக்கும் தன்மை உடையது ஜீவநாடி பரிகாரங்கள்..ஓம் ஸ்ரீ ஜெகதீஸ்வராய நமஹ..

    பதிலளிநீக்கு