வாணியும் தமிழ்ப் புலவரே
புலமை இலக்கணம்-மரபியல்பு
நூற்பா: 73
67.வாணியும் தமிழ்ப் புலவரே
வெண்மலர்க் கமல மீதுவீற்
றிருந்து எவர் எவர் கவிகளும்
என்னது என்னும் வெண்பா
வொன்று விளம்பினள் அன்றே
நாவின் கிழத்தியும் “நாடா முதல்” என.
இதன்பொருள்:
விளக்கம்:
“நாடா முதல்நான் மறைநான் முகன்நாவிற்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் --கூடாரை
எள்ளுவன் மீன்உயர்த்த ஏந்துஇலைவேல் வேந்தனே
வள்ளுவன் வாயதுஎன் வாக்கு”
எனும் வெண்பாவை நினைந்து கூறியது இது. இதில் வேதம், பாரதம், திருக்குறள் யாவும் யான் பாடினேன் என வாணி கூறுவதாக அமைந்துள்ளமை காண்க.
நன்றி : சிரவையாதீனம்
தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக