புதன், 13 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-10

முருகப் பெருமான் இயற்கைக்கு உரிய கடவுள். நாம் எப்போது முருகாகிய இயற்கைக்கு எதிராக நமது வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கின்றோமோ அப்போதே பல பிரச்சினைகள் வர ஆரம்பித்து விடுகின்றன. முருகு என்பது இயற்கை மணம் அழகு கடவுட் தன்மை எனப் பொருள்படும் என்கின்றார் திரு.வி.க. கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பு என்கின்றது முருகாற்றுப்படை. நமது உடல் இயற்கையோடு இயைந்த வாழ்வில் ஆரோக்கியமாகவும் இயற்கைக்கு எதிரான வாழ்வில் நோய்களோடும் வாழும்படி நேரிடுகின்றது. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். உடல் நலமாக இருந்தால்தான் மனம் நலமாக இருக்கும். மனம் நலமாக இருந்தால்தான் உடல் நலமாக இருக்கும். மனமும் உடலும் ஒன்றோடொன்று தொடர்பு உடையவை. ஒன்று கெட்டாலும் இன்னொன்று கெட்டு விடும். முருகப் பெருமானை வண்ங்கி 4448 நோய்களையும் தீர்த்துக் கொள்ள முடியும். பால தேவராய சுவாமிகள் கந்தர் கவசங்களைப்பாடி தனது தீராத வயிற்று நோயைத் தீர்த்துக் கொண்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சண்முககவசம் பாடியதால் முறிந்த எலும்பு பாம்பன் சுவாமிகளுக்குக் குணமாகி உள்ளது. திருச்செந்தூரில் புஜங்கம் பாடி பன்னீர் இலை விபூதியை வைத்த உடனேயே ஆதிசங்கரரின் நோய் குணமானது. இப்படி முருகன் அருளால் நோய்கள் குண்மான வரலாறுகள் முருகன் பெயர் போலவே வெகு கோடி... அவ்வளவு ஏன் தொழு நோயால் பீடிக்கப்பட்ட அருணகிரிநாத சுவாமிகளுக்கு முருகன் அருளால் பொன் போன்ற மேனி கிடைக்க வில்லையா. மற்ற நோய்கள் எல்லாம் தொழுவதால் அந்த நோய்க்கு தொழு நோய் எனப் பெயர் என்பார் வாரியார் சுவாமிகள். வைஷ்ணவ அடியவரான பகழிக் கூத்தர் ஒருமுறை கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டார். வைணவத் தொழுகை அந்நோயைக் குணப்படுத்தவில்லை. எனவே, "தனக்குள்ள வயிற்று நோயைத் தீர்த்து வைத்தால் உன் மீது பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்" என திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிக்கொண்டார். வயிற்றுவலி சில நாள்களிலேயே தீர்ந்துவிட்டது. எனவே  திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியத்தை 103 பாடல்களில் பாடினார். அவரது நோய் உடனடியாகத்தீர்ந்தது. இப்படி மன நோய் உடல் நோய் மட்டுமல்ல காம குரோத லோப மோக மத மாத்சரியமான ஆன்மாவைப் பீடித்துள்ள எப்பேர்பட்ட கர்ம வினை நோய்களாக இருந்தாலும் இந்த திருப்புகழைத் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் அனைத்து நோய்களும் தீர்வதை அனுபவத்தில் காணமுடியும். நமது ஜீவ நாடியில் ஏரளமாவர்களுக்கு நோய் தீரும் வழிகள் உரைக்கப்பட்டு ஏராளமான நோய்கள் தீர்ந்துள்ளன. மருந்து உண்ண வேண்டியதும் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது கட்டாயம்தான் ஆனாலும் மருத்துவர் கொடுக்கின்ற மருந்துகள் உரியபடி நோயைக்குணமாக்க இந்த திருப்புகழ் உதவுகின்றது. இன்னும் ஏராளமானவர்களுக்கு உரிய சரியான மருத்துவர்கள் கிடைத்து அதன் மூலம் நோயகள் குணமாகி உள்ளது. இன்னும் பலபேர்களுக்கு மருத்துவம் கைவிட்டாலும் மால் மருகன் கௌமாரச் செல்லமாகிய ஞானஸ்கந்தன் கைவிடுவதில்லை. ஏராளமான அதிசயங்களைப் பார்த்து வருகின்றோம். எனவே குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந் திருப்புகழைக் கேளீர் தினம்.
திரு.வி.க

 நக்கீரர்

                                                       
                                                         பால தேவராய சுவாமிகள்
                                                       
                                                                      பாம்பன் சுவாமிகள்
                                                                 
                                                                                   ஆதி சங்கரர்
                                         
                                           பன்னீர் இலை விபூதி
                                             
                                          பகழிக்கூத்தர்

  திருப்புகழ்
இருமலு ரோக முயலகன் வாத
      மெரிகுண நாசி                                விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
      யெழுகள மாலை                    யிவையோடே
பெருவயி றீளை எரிகுலை சூலை
      பெருவலி வேறு                      முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
      படியுன தாள்கள்                       அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
      மடியஅ நேக                                 இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
      வடிசுடர் வேலை                      விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லுர்தி
      தருதிரு மாதின்                             மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
      தணிமலை மேவு                         பெருமாளே

சுருக்க உரை:
பல கொடிய நோய்கள் ஒவ்வொரு பிறவியிலும் என்னை வருத்தாத படி உன்னுடைய திருத்தாள்களை உதவி அருள்க. கோடிக் கணக்கான அசுரர் படை இறந்து பட வேலை விடுபவனே. இந்திரனுடைய மகளான தேவசேனையின் மணவாளனேபூமியின் நடுவில் சிறப்பாக விளங்கும் தணிகை மலையில் வீற்றிருப்பவனே,நோய்கள் நலியாதபாடி உன் தாள்களை அருள்வாய்.
                                                              
                                                                            இந்திரன்
                                                                
                                                               தெய்வானையம்மையார்

                                           
                                                                                திருத்தணி
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக