கோவை சின்னியம்பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலையை கௌமார மடாலயம் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் திறந்து வைத்து அருள் உரை நிகழ்த்தினார்கள்.
நமது கலாச்சாரம், பண்பாடு , மொழி அனைத்தும் 3000 ஆண்டுகள் பழமையானது. மனிதன் தன் வாழ்வை எப்படி அமைத்துக் கொண்டு வாழ வேண்டும் என்று வழிகாட்டியவர் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்துக்கு அடுத்து வான் சிறப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். நீரின்றி அமையாது உலகு என உலகுக்கு உணர்த்தியவர்.அவர் காட்டிய வழியில் நாம் நடந்து நமது சந்ததியினருக்கும் வழிகாட்ட வேண்டும் என்று சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் தனது அருளுரையில் குறிப்பிட்டார்கள்.
கோவை தினமணி நாளிதழில் வந்த செய்தி
நன்றி: தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!!
என்றும் எம் ஞானதேசிகர் பணியில்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக