சனி, 2 ஜனவரி, 2016

மலேசியாவில் சிரவை ஆதீனம் அவர்கள்

ஞானப்பழத்திற்காக வைக்கப்பட்ட போட்டியில் உலகத்தை ஒரு நொடிப்பொழுதில் வலம் வந்தவர் நம் வழிபடு கடவுளாகிய முருகப்பெருமான். உலகை ஒரு நொடியில் வலம் வரும் சித்ர கலாப மயிலே என்பார் அருணகிநாத சுவாமிகள். அந்த வகையில் முருகப்பெருமானை பரம்பொருளாக வழிபடும் கௌமார சமயத்தினர் இந்த உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளார்கள். உலகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து கௌமார பகதர்களுக்கும் தலமை கௌமார மடமாகத் திகழ்ந்து வருவது கோவை கௌமார மடாலயமே. முருகப் பெருமானின் வம்சாவளி குரு நாதர் சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள். சிரவை ஆதீனமே நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கும் குரு நாதர் ஆவார்கள். முருகனைப் போன்றே அவரது வம்சாவளி குரு நாதரும் இது போல் பல நாடுகள் சென்று நமது கௌமார சமயத்திற்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாக சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களின் இந்த மலேசியா பயணம் அமைந்துள்ளது.
அந்த வகையில் மலேசியா நாட்டில் ஈப்போ மாகாணத்தில் நடந்த அருணகிரிநாதர் சுவாமிகள் விழாவில் சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள். அதன் படங்களில் சில





படங்கள்: மத்திய அமைச்சர் டத்தோ சரவணன், எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன்,சட்டமன்ற உறுப்பினர் ஷா சீனர், விழாக்குழுத்தலைவர் மருத்துவர் ஜெயபால் உள்ளிட்டோர் சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வணங்கினர் 
படம்: மலேசியா நாட்டில் ஈப்போ மாகாணத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் புகைப்படம் மற்றும் தண்டபாணிக்கடவுள் திருக்கோவில் உள்ளது





படங்கள் மலேசியா நாட்டு தமிழ் நேசன் நாளிதழில் வெளிவந்த செய்திகள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்

சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக