மன்மத ஆண்டு மார்கழித்திங்கள் 09.01.2016 சனிக்கிழைமை அன்று நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் 20 வது ஆண்டு தைப்பூச கொடியேற்றம், கணபதி வேள்வி, முருகன் வேள்வி, சிறப்பு அபிடேகம், வேல் தீபம், சர்வ சித்தி தீபம், சிவலிங்க தீபம் ஏற்றி ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களால் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவும் நடந்தது. இந்த பூஜைகள் அனைத்தும் செந்தமிழ் மந்திரங்களால் திரு நெறிய தெய்வத்தீந்தமிழ் முறைப்படி நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு செந்தமிழ் மந்திரத்திரட்டு புத்தகத்தின் ஆசிரியர் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு. மோகன சுந்தரம் ஐயா அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் மகேஸ்வர பூஜை செய்து மகிழந்தார்கள். பூஜையில் ஏற்றப்பட்ட விளக்குகளின் மகிமையால் 18 சித்தர்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டவர்களை ஆசீர்வத்தித்ததாக ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. விழாவின் சில படங்கள்:
படம்: 18 அடி வேலும் பாங்காகக் காட்சிதரும் பரம்பொருளின் கொடியும்
படம்: வேல் தீபம், சிவலிங்கத்தில் 63 நாயன்மார்கள் தீபம்
படம்: விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் கூட்டம்
படம்: கணபதி, முருகன், வாராஹி வேள்வி
படம்: சிவனடியார் மோகன சுந்தரம் அவர்களின் சொற்பொழிவு
படம்: சிவனடியார் மோகன சுந்தரம் அவர்களுக்கு மகேஸ்வர பூஜை
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக