திங்கள், 4 ஜனவரி, 2016

மலேசியாவில் சிரவை ஆதீனம் அவர்கள் ஆசியுரை

 படம்: மலேசியாவில் அருணகிரி நாதர் விழாவில் ஆசியுரை

மலேசியா விழா பற்றிய  நிகழ்வுகளை சிரவை ஆதீனம் அவர்கள்
ஸ்ரீஸ்கந்த உபாசகர்  அவர்களிடம் பகிர்ந்து கொண்ட செய்திகளை இங்கு வெளியிடுகின்றோம்.

மலேசியாவில் ஈப்போ மாகாணத்தில் நடந்த அருணகிரிநாதர் விழாவிற்கு அரசு 10000 ஆயிரம் வெள்ளி நிதியுதவி செய்துள்ளது. நமது இந்திய மதிப்பில் 155000 ரூபாய் தொகை ஆகும்.மாநில அரசு சமய வகுப்பிற்கு இதே அளவு நிதியுதவி செய்துள்ளது.விடுமுறை கால பயிற்சியில் 82 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். அம்மாணவர்களுக்கு சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்களும், அமைச்சரும் சான்றிதழும் பதக்கமும் வழங்கி பாரட்டினார்கள்.அமைச்சர் எதிர்கட்சி நாடளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பனர் ஷா சீனர் விழாவின் ஆரம்ம் முதல் முழுமையாக இருந்தனர்.அமைச்சரின் பேச்சு மிக அருமையாக இருந்தது என்றும் அவர் திருமுறை,திருப்புகழ் உள்ளிட்ட பாடல்களில் ஆழ்ந்த புலமையுடையவர் என்பதை அவரின் பேச்சின் மூலம் உணர முடிந்தது என்றும் சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் தெரிவித்து மகிழ்ந்தார்கள்.ஆங்கிலத்தின் மூலம் திருப்புகழைப் பதிவு செய்து படிப்பவர்களை மிகக் கடிமையாக கண்டித்தார் அமைச்சர்.அனைவரும் தமிழைப் படித்து அதன் பின் பாடல்களைச் சொல்லிக் கொடுங்கள் என்றார்.எதிர்காலத்தில் ஜனவரி முதல் தேதியில் அருணகிரிநாதர் விழா மலேசியா நாடு முழுவதும் கொண்டாடப்பட வேண்டும்.அதை தேசிய விழாவாக மாற்றபட வேண்டும்.அதற்கான முயற்சியாக விழா அன்று மலேசியா முருக பக்தர்கள் பேரவை தொடங்கப்பட்டுள்ளது என்றும் சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் தெரிவித்தார்கள்.இதன் நோக்கும் அடுத் தலைமுறைக்கு முறையான நமது முருக வழிபாட்டை கொண்டு செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.இவ்விழா கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.இந்த ஆண்டு மூன்று மாகணங்களில் உள்ள முருகன் கோயில்களில் இவ்விழா நடைபெற்றதுள்ளது.வழிபாடு என்பது வெறும் ஆடம்பரமான பக்தி மட்டுமல்ல.உண்மையான அருளார்களில் அரும்பெரும் வாரலாறு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.பல தமிழர்கள் நமது பாரம்பரியமான முருக வழிபாடுகளை விட்டு பிற வழிபாடு நோக்கிச் சென்று கொண்டுள்ளனர்.அவர்களை மீண்டும் நமது வழிபாட்டு நெறிக்கு கொண்டு வரவேண்டும்.நாமும் நமது பகுதிகளில் ஒரு பக்தி இயக்கத்தை தோற்றுவிக்க வேண்டும்.அவர்கள் திருப்புகழ் உள்ளிட்ட பாடல்களை பாடி வழிபாடு செய்ய வேண்டும்.அங்கு விழாவில் குழந்தைகள் முதல் பெரிவர்களை வரை மரபு சார்ந்த உடைகளுடன் கோயிலுக்கு வருகின்றனர்.நாம் நமது கோயிலுக்கு எவ்வுடையுடன் செல்ல வேண்டும் விவாதம் நடைபெறுகின்றது என்றும் சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் தெரிவித்தார்கள்.
இதையெல்லாம் நமது தமிழக மக்களும் அரசும் உணர வேண்டும். நமது பாரம்பரியமான முருக பக்தியை மறந்துவிட்டு பாதை மாறிச்சென்று கொண்டிருக்கின்றோம். பக்தியால் மட்டுமே வருங்கால சந்த்தியினருக்கு ஒழுக்க நெறிகளை உணர வைக்க முடியும் எனவே குரு பக்தியும் முருக பக்தியும் நமது தமிழகத்தில் பெருக நமது கௌமாரபயண வாசகர்கள் அனைவரும் தங்களால் இயன்ற முயற்சிகளை எடுக்க வேண்டும். எமது ஞானதேசிகர் சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் கௌமார நெறியை உலகம் முழுவதும் போதித்து மக்கள் அனைவரையும் நல்வழிப்படுத்தி வருகின்றார்கள். எனவே நாமும் திருப்புகழை தினமும் பாடியும், முருக பக்தியில் திளைத்தும் நமது வருங்கால சந்த்தியினருக்கு முருக பக்தியை எடுத்துக் கூறி நல்வழிப்படுத்தியும் நமது சங்ககாலத்திற்கும் முன்பு இருந்து வருகின்ற இயற்கையோடு இணைந்த இந்த முருக வழிபாட்டை மேற்கொள்ள வைக்க வேண்டும். அருணகிரி நாதர் திருப்புகழை இந்த அவணியெங்கும் முழங்க வைத்து முருகனின் அடியார்கள் அடைந்த அருமை பெருமைகளை அனைவரும் அறிய வைக்க வேண்டும். மலேசியா நாட்டினர் உணர்ந்த அள்விற்குகூட நாம் முருக பக்தியில் திளைப்பதில்லை என்பதே அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.
மலேசியா நாட்டு மத்திய அமைச்சர் விளையாட்டு மற்றும் இளைஞர் நல துணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்கள் ஆறாம் ஆண்டு அருணகிரிநாதர் விழாவில் கலந்து கொண்டு சென்ற பின்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் அருணகிரி என்று பெயர் வைத்துள்ளார். இதைக் காட்டிலும் அவர்கள் சமய ஈடுபாட்டை நாம் காட்ட முடியாது என்று எமது குரு நாதர் சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் என்னிடம் தெரிவித்த போது எனது கண்களில் கண்ணீரே வந்து விட்டது. என்னே ஒரு முருக பக்தி. இது போல் நமக்கே உரிய பாரம்பரிய முருக பக்தியை நாம் கைவிடாமல் இன்னும் இன்னும் முருகா...முருகா... என ஓதி, உள்ளம் குழைந்து கண்ணீர் மல்க நாம் அனைவரும் முருக பக்தியில் திளைக்க இன்றே ஒரு மனதாகக் கைகோர்ப்போம். நம்மை சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் சிறப்பாக வழி நடத்துவார்கள். இன்று முதலே தினமும் ஒரு திருப்புகழை பக்தியால் பணிந்து பலகாலும் பற்றியே மா திருப்புகழ் பாட குருவருளால் ஒரு சபதம் செய்வோம்.
திருப்புகழைக் கேளீர் தினம்!

கான மயில் வீரன் திருப்புகழைக் கேட்கும் செவி!!

முத்திக்கு ஒரு வித்துக் குருபரன் என ஓது!!!

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள் பதமே துணையது!!!!

ஜெப மாலை தந்த சற்குரு நாதா!!!!!

நாத விந்து கலாதி நமோ! நமோ!!

தருணமிதுயா மிகுத்த கனமதுர நீள் சௌக்ய சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு  தகைமை சிவ ஞான முக்தி பரகதியும் நீ கொடுத்து உதவி செய்ய வேனும் நெய்த்த வடிவேலா!!!!!

அதிசயம் அனேகமுற்ற பழனி!!

அரிய தமிழ் தானளித்த மயில் வீரா!!!

இது போன்று திருப்புகழில் பொதிந்து கிடக்கும் அருள் மதிரங்கள் ஏராளம்! ஏராளம்!! எனவே தான் வள்ளிமலை சச்சிதானந்தம் சுவாமிகளுக்கு திருப்புகழ்தான் மகா மந்திரம் என்று திருவண்ணாமலையில் சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.
எனது குரு சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் ஒரு வெண்பாவில் திருப்புகழின் பெருமையையும் அதைப் படித்தால் இன்னல் இன்றி வாழ்ந்திடலாம் என்கிறார்கள்

அருணகிரி நாதர் அருந்தமிழ் வண்ணச்
சரபமுனி, நம் கந்தசாமிக்- கருணைமுகில்
என்னுஒரு மூவர் இயற்றமிழை ஓதிடுவோர்
இன்னலின்றி வாழ்ந்திடுவா ரே

இந்த வெண்பாவை 29.12.2015 அன்று நடந்த ஆதீனக் குரு முதல்வர் குரு பூசை விழாவில் வெளியிடப்பட்ட திருப்புகழ்த் திரட்டு எனும் நூலின் வாழ்த்துரையில் சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் எழுதியுள்ளார்கள். அதே போல் வருடந்தோறும் திருப்புகழ் இசை விழாவை பெரிய விழாவாக கௌமார மடாலயத்தில் சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள் நடத்தி அருணகிரியின் பெருமையைப் பறைசாற்றி வருகின்றார்கள்.
சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்களின் உபதேசப்படி சீடன் எனும் வகையில் இனிமேல் தினமும் ஒரு திருப்புகழும் அதன் மகிமையும் நமது கௌமாரபயணத்தில் தொடர்ந்து வெளிவரும். என்னிடம் இருக்கின்ற அபூர்வ ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் திருப்புகழ் பற்றி ஜீவ நாடி உரைக்கும் அரிய இரகசியக் குறிப்புகளும் இனி அந்த தொடரில் இடம் பெறும். நமது கௌமார பயணம் வாசகர்கள் முடிந்த அளவு இந்த இணைய முகவரியை அனைவரிடமும் பகிர்ந்து முருக சேவையும் குரு சேவையும் செய்து கௌமார நெறியில் இணைந்து அரை நிமிஷ நேரமட்டில் தவமுறை தியானம் வைக்க தித்திக்கும் திருப்புகழைப் படித்து பாரினில் பரிசுத்தாமாய் பரம்பொருள் ஸ்ரீஞானஸ்கந்தனின் அருளோடு வாழ எனது குரு நாதர் சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்களை பிரார்த்தனை செய்கின்றேன்.


நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்கள்
 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!!

கட்டுரையை எழுதியவர்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக