செவ்வாய், 15 டிசம்பர், 2015

2ம் ஆண்டு கழுகுமலை மலர்க்காவடி விழா ஒரு கண்ணோட்டம்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பூச்சொரிதல் விழா மற்றும் மலர்க்காவடி விழா கோவை சிரவை ஆதீனம் தலைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள் தலைமையில் சென்ற ஆண்டு 21.12.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில், தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடந்து வருகின்றன. இதில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மட்டுமன்றி பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்களும் கலந்துகொள்வார்கள்.விருதுநகர் மாவட்ட முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில் 2–ம் ஆண்டு பூச்சொரிதல் விழா மற்றும் மலர்க்காவடி விழா டிசம்பர் 21.12.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் நடந்தது.
முன்னதாக மலர்க்காவடி ஊர்வலம் கோவில் மேல வாசலில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டது. கோவை ஆதீனம் தலைவர் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் தலைமையில் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலாய சுவாமிகள், வேலூர் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், பேரூர் ஆதீனம் இளைய பட்டம் மருதாச்சல அடிகளார் மற்றும் பக்தர்கள், பெண்கள், சிறுவர்சிறுமிகள் உள்பட சுமார் 500–க்கும் மேற்பட்டோர் மலர்க்காவடி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். இந்த மலர்க்காவடி ஊர்வலம் கிரி பிரகாரம், மேல ரதவீதி, கீழ ரதவீதி, நாராயணசாமி கோவில் தெரு, கீழ பஜார், அரண்மனை வாசல் தெரு வழியாக மலைக்குன்றை வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அதன் பின்னர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி இருந்த உற்சவ மூர்த்திக்கு மலர்களால் புஷ்பாஞ்சலி செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட முருக பக்தர் பேரவை அறக்கட்டளையினர் செய்து இருந்தனர்.
சென்ற ஆண்டு நடந்த மலர்க்காவடி விழாவின் சில படங்கள்:



இந்த ஆண்டில் 3வது ஆண்டு மலர்க்காவடிப் பெருவிழாவானது வருகின்ற 20.12.2015 ஞாயிற்றுக் கிழமை காலை சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் தலமையில் சிறப்பாக நடக்க இருக்கின்றது. பகதர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி கௌமார நெறியில் இணைந்து குருவே பரம் பொருள் எனும் உண்மையை உணர்ந்து உய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள சென்ற பதிவுகளைப் பார்க்கவும்.
நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்

என்றும் எம் ஞானதேசிகர் பணியில்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக