சனி, 12 டிசம்பர், 2015

கௌமார மடாலயம் குரு பரம்பரை

ஆதி குருவாகிய பரம் பொருள் முருகப்பெருமான் அருணகிரி நாத சுவாமிகளுக்கு உபதேசம் புரிதல் (அகச்சந்தானம்)
அருணகிரிநாத சுவாமிகள் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளாக திருஅவதாரம் செய்தல் (ஆதாரம் உள்ளது) (அகச்சந்தானம்)
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் கோவை திருப்பெருந்திரு இராமானந்த சுவாமிகள் பழனியில் உபதேசம் பெற்று சிரவையில் கௌமார மடலாயம் நிறுவுதல் (புறச்சந்தானம்-உபதேச பரம்பரை)
தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் அவர்கள் சிரவை ஆதீனம் இரண்டாம் சந்நிதானமாக  அருளாட்சி ஏற்றல்
 தவத்திரு. கஜபூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள் சிரவை ஆதீனம் மூன்றாம் சந்நிதானமாக  அருளாட்சி ஏற்றல்
 தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் சிரவை ஆதீனம்  நான்காம் சந்நிதானமாக  தனது 24ம் வயதில் அருளாட்சி ஏற்று இப்போது சீரும் சிறப்புமாக பேரும் புகழுடன் திகழ்ந்து வருதல்

                           கௌமார மடாலய நான்கு சந்நிதானங்களின் படம்

ஆதி குருவாகிய பரம்பொருள் முகப்பெருமானிடம் இருந்து பெற்ற உபதேசம் இப்படி பரம்பரை பரம்பரையாகத் தொடர்கின்றது. எனவேதான் குருவே பரம்பொருள் எனப் போற்றுகின்றது கௌமார சமயம்.
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவை ஆதீன சீர்த்தி சிறக்கட்டும்!!
என்றும் எம் ஞானதேசிகர் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் பணியில்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக