புதன், 16 டிசம்பர், 2015

கௌமார மடாலயத்தில் அறுசமயக் கோவில்கள்

கோயம்புத்தூர் சிரவை கௌமார மடாலயத்தில் அறு சமயக் கோவில்கள் அழகுற அமைந்துள்ளன. மார்கழி மாதம் பிறக்கின்ற இந்த நேரத்தில் கௌமார மடாலயக் கோவில்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்

படம்: கௌமார மடாலயத்தின் எழிழ்மிகு தோற்றம்
சமயங்கள் ஆறு, வழிபடும் நாட்கள் ஏழு.
1. சௌரம்- சூரியன்.- ஞாயிறு வழிபாடு
கௌமார மடாலயத்தில் சூரியனுக்கு கோவில் உள்ளது 


2. சைவம்-சிவ பெருமான்-திங்கட்கிழமை வழிபாடு
கௌமார மடாலயத்தில் சிவனுக்கு கோவில் உள்ளது. சிவனின் திரு நாமம் அவினாசியப்பர் என்பதாகும்
3.சாக்தம்- அம்பிகை- செவ்வாய்க்கிழமை வழிபாடு
கௌமார மடாலயத்தில் அம்மனுக்கு கோவில் உள்ளது.அம்மனின் திரு நாமம் கருணாம்பிகை என்பதாகும்

4.வைணவம்- விஷ்னு-புதன்கிழமை வழிபாடு
கௌமார மடாலயத்தில் விஷ்னுவிற்கு கோவில் உள்ளது. விஷ்னுவின் திரு நாமம் பாண்டுரங்கர் என்பதாகும்.

5.காணாபத்யம்- கணபதி- வியாழக்கிழமை வழிபாடு
கௌமார மடாலயத்தில் கணபதிக்கு கோவில் உள்ளது. கணபதியின் திரு நாமம் சித்தி மகோட்கட வினாயகர் என்பதாகும்
4.கௌமாரம்- முருகப்பெருமான்-வெள்ளிக்கிழமை வழிபாடு
கௌமார மடாலயத்தில் முருகனுக்கு கோவில் உள்ளது. முருகனின் திரு நாமம் தண்டபாணிக்கடவுள் என்பதாகும்
7.சனிக்கிழமை- குரு வழிபாடு
கௌமார மடாலயத்தில் சனிக்கிழமைக்குரிய குரு வழிபாட்டிற்கும்  முதல் மூன்று ஆதீனங்களின் மூவர்சமாதிக் கோவில் உள்ளது.
தவத்திரு இராமாந்த சுவாமிகள் சமாதித் திருக்கோவில்
   
தவத்திரு கந்தசாமி சுவாமிகள் சமாதித் திருக்கோவில்
தவத்திரு சுந்தர சுவாமிகள் சமாதித் திருக்கோவில்
வியாழக்கிழமையில் குரு வழிபாடு என்பது பொதுவாக மக்களிடையே பரவி உள்ளது. ஆனால் வியாழக்கிழமைக்கு உரிய வழிபாடு கணபதி வழிபாடு ஆகும். சனிக்கிழமைதான் குரு வழிபாட்டிற்குரிய நாளாகும். குருவே பரம்பொருள் என்பது கௌமார நெறியாகும். முருகப்பெருமானை பரம்பொருளாகக் கொண்டு வழிபடும் சமயமே கௌமாரம் ஆனாலும் மற்றைய சமய தெய்வங்களிப் புறக்கணிக்கக்கூடாது என்பது கௌமார நெறியாகும். அந்த வகையில் கௌமார மடாலயத்தில் சமய, சமரச, சமயாதீதமான கௌமார நெறியில் நின்று அறுசமயக் கோவில்களில் அந்தந்த சமய தெய்வங்களுக்குரிய சிறப்பு தினங்களில் வழிபாடுகள் எமது ஞானதேசிகர் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களால் சிறப்பாக நடத்தப்படுகின்றது. இந்து மதத்தில் ஏராளமான தெய்வங்கள் இருக்கின்றது. அதில் எந்த தெய்வத்தை நான் வழிபடுவது என குழம்பும் மக்களுக்கு கௌமார நெறி தீர்வு தருகின்றது. எந்த தெய்வத்தியும் வழிபடலாம் பரம் பொருள் நாம் வழிபடும் தெய்வத்தின் உருவில் வந்து நம்மைக் கரை சேர்க்கும் என்பதே கௌமார தத்துவம். எம்மதமும் சம்மதம் என்பது கௌமார நெறியில் நின்று பார்க்கும்போதுதான் உண்மையாகுமேயன்றி மற்றவை வெறும் வாயளவில்தான் இருக்கும் என்பது திண்ணம்.
இறை வழிபாட்டிற்குரிய மார்கழி மாதம் பிறக்கும் இந்த தருணத்தில் அறு சமய வழிபாட்டோடு குரு வழிபாட்டையும் இணைத்து இந்த மார்கழி மாதம் முழுவதும் ஏழு நாளும் மேற்சொன்ன முறையில் வழிபட அந்த குருவருளும் திருவருளும் சித்திக்கும் என்பது திண்ணம். இந்த மார்கழி மாதம் குறித்து எமது ஞானதேசிகர் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் கூறும்போது பீடுடைய மாதம் இந்த மார்கழி மாதம் எனவே இறைவனை இதய பீடத்தில் எழுந்தருளச் செய்து அதிகாலை எழுந்து நீராடி திருப்பாவை திருவெம்பாவை போன்ற பாடல்களைப் பாடி ஆலயம் சென்று வழிபட வேண்டும் என்று உபதேசம் செய்கின்றார்கள். இந்த உபதேசத்தை நமது கௌமார பயண வாசகர்கள் அனைவரும் கடைபிடித்து குருவழியில் நின்று குமாரப் பெருமானின் அருளால் குன்றாத வாழ்வைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி: எமது ஞானதேசிகர், உபதேச குரு சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்

அன்பன்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
மின்னஞ்சல் தொடர்புக்கு:  kaumarappayanam@gmail.com
.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக