செவ்வாய், 29 டிசம்பர், 2015

ஜீவ நாடி கலையரசு எழுதிய புண்ணிய சக்கரம் நூல்

மனிதனின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வாழ்வில், நித்தமும், நிகழும் நிகழ்வுகளை உள்ளடக்கியது தான் இராசி சக்கரம் என்னும் ஜாதக கட்டமாகும். உடலைவிட்டு உயிர் பிரிந்த நேரம், நாள், நட்சத்திரம், திதி, ஊரை வைத்து, உயிர் பிரிந்த முன்னும், பிரிந்த பின்னும் ஆன்மாவின் நிலையை அறிந்திட உதவுவது தான் "இறப்பின் இரகசிய புண்ணிய சக்கரமாகும்". இது ஸ்ரீஸ்கந்த உபாசகர் "ஜீவநாடி கலையரசு" "திரு.ஜெகதீஸ்வரன்" அவர்களின் முத்தான மற்றுமொரு வித்தான அரிய படைப்பு. 
எல்லோரும் மரணத்திற்கு பின் உள்ள இரகசியங்களை தெரிந்-துக் கொள்வது அவசியமாகும். மரணங்கள் பல இரகம். ஆனால் மரணத்திற்கு பின் ஆன்மாவானது சாந்தி பெற்று மேலுலகம் சென்றதா என்பதை தெரிந்துக் கொள்வது சூட்சுமமாகும். கண்ணுக்கு புலப்படும் ஸ்தூல சரிரத்தை விட ஒருவர் இறப்பிற்கு பின் எடுக்கும் சூட்சும வடிவத்திற்கு ஆகர்ஷண ஆற்றல் அதிகம். இன்று மனிதர்கள் காணும் எல்லாவிதமான பிரச்சனைகள், தடைகள், வறுமை, பிணி, சண்டை சச்சரவு, பூர்வீக சொத்து வில்லங்கம், குடும்பப் பிரிவு, விபத்து அகால மரணம் என அனைத்திற்கும் காரணம் பித்ரு தோஷமே ஆகும். இது எளிதில் தீர்க்கமுடியாத ஒரு தோஷமாகும். தங்களோடு வாழும் காலத்தில் பெற்றவர்களை சரிவர கவனிக்காமல் கொஞ்சமும் மதிக்காமல், சுய நலத்தோடு அவர்கள் மனம் புண்படச் செய்வதால் அந்திம காலத்தில், உயிர்பிரியும் நேரத்தில், நிர்கதி நிலையில், விரக்தியின் விளிம்பில், உயிர் காணும் ஏக்கங்கள், தீராத மனவலி, மாறாத வேதனைகளுடன், சாதாரண ஆசைகள் கூட நிராசையாய் போக அந்த ஆன்மாவானது சாந்தி இன்றி சாபமாய், தோஷமாய், பாபமாய், அடுத்து வரும் சந்ததியை பித்ரு தோஷமாய், கடுமையாய் பாதிப்படையச் செய்கிறது. 
அப்படிப்பட்ட பித்ரு தோஷத்தை முழுவதுமாய் நீக்கவல்ல அற்புத பரிகார பொக்கிஷ நூல் தான் "புண்ணிய சக்கரம்" ஆகும். இதில் ஒருவர் இறந்த பின் அடையும் நிலையை அறிந்து அதற்குரிய பரிகாரங்கள் மூலம் அறவே போக்கும் சூட்சுமங்கள் ஏராளம் தாராளமாய் தரப்பட்டுள்ளது. 
இறந்தவரின் நேரத்தை வைத்து புண்ணிய சக்கரம் மூலம், ஒருவரின் மரணம் இயல்பாய் அமைதியாய் தன்னிலை அறியாமலே சுபமாய் நிகழ்ந்ததா அல்லது தாங்க முடியாத வலிகளோடு, தீர்க்க முடியாத பிணியோடு போராடி தோற்று, படுத்த படுக்கையாய், அவதியில், அல்லல் உற்று, நிம்மதியின்றி பிரிந்ததா அல்லது அற்ப ஆயுளுடன் நிறைவேறா ஆசைகளுடன், திடீர் விபத்து மற்றும் தீயோரின் வஞ்சத்தால், துரோத்தால், கொலை, தற்கொலையால், உயிர் பிரிந்ததா என்பதை சில நிமிடங்களில் அறிந்திடலாம். சில நேரங்களில் செய்வினை மற்றும் அபிசார பிரயோகத்தில் மரணம் அடைந்த ஆன்மாவின் கோபத்திற்கு யாவரும் ஆளாக நேரும். ஆகவே ஆன்மாவின் நிலையை அறிந்து உணர்ந்து அதற்குரிய முறையான பரிகாரம் செய்வதால் ஆன்மாவானது சாந்தி பெறும். 
குறிப்பிட்ட சில நாள் நட்சத்திரம் திதி சேர்வதை தனிஷ்டா பஞ்சமி என்பர். இந்நாளில் இறப்பவர் குடும்பம் மிக பெரிய தோஷத்திற்கு ஆட்படும். இதனால் ஏற்படும் தீட்டானது (அடைப்பு) சில நேரங்களில் மீண்டும், மீண்டும், திடீர் மரணங்கள், அடுக்கடுக்கான அமங்கல நிகழ்வுகள் மற்றும் வாஸ்து தோஷமாகவும், விபத்-து, நோய் நொடி என காரணம் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் மீழா துயரத்திற்கு அந்த ஆன்மாவானது ஏற்படுத்தும். அப்படி இறந்தோரை சாந்தி படுத்தும் விதி முறைகளும் இரகசியங்களும் விளக்கமாய் எடுத்துரைத்துள்ளார் திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள். 
புண்ணிய சக்கர நூலைக் கொண்-டு ஒருவர் இறக்கும் போது அவரது நிலையையும், இறப்பின் இரகசியத்தையும், இறுதியில் ஆன்மாவின் தற்போது நிலையையும் அறியலாம். இதனால் உயிரோடு இருக்கும் தலைமுறைகள் வாழ்க்கையை வளப்படுத்த சில பரிகார முறைகள் மூலம் வழி காணலாம். இந்நூலில் பல உதாரண ஜாதகங்கள் தரப்பட்டுள்ளன. அதிலும் பல மகான்களின் புண்ணிய சக்கரம் அவர்களது ஆன்மாவின் இரகசியத்தை சாதாரண மக்களும் அறிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது. 
புண்ணிய சக்கரமும், ஆவிகளும் என்ற தலைப்பின் கீழ் ஆவி உலக ஆராய்ச்சிகள் அழகாய் தொகுத்து தரப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆவிகளுடன் பேசுவதும், ஆவிகளின் கோரிக்கையை அறிந்து உரைப்பதும் தொடர்ந்து வருகிறது. ஆயினும் புண்ணிய சக்கர நூல் ஒன்று மட்டும் இருந்தால் போதும். ஆவிகளை பற்றிய அத்தனை இரகசியங்களும் எளிமையாய் புரியும். ஆவிகளைப் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்வோருக்கு இந்நூல் பெரிதும் உதவும். இதில் உயிர் பிரியும் விதங்களை அழகாய் ஜீவநாடி கலையரசு வெளிப்படுத்தியுள்ளார். முக்கியமாக கபால வழியில் உயிர் பிரிவது மகான்களுக்கு என்றும் ஆசன வழியில் விலகுவது பாவிகளுக்கு என்றும் உயிர் பிரியும் வழிகளை தொகுத்துள்ளார். 
முன்னொரு காலத்தில் தங்கள் குலம் தழைக்க உயிர் நீத்தோரின் ஆவியை தான் குல தெய்வமாக வழங்கப் பெற்று வணங்குகிறார்கள் எனும் சூட்சுமத்தை காரண காரிய ஒப்பீட்டுடன் விளக்கியுள்ளார். திரு.றி.ஞி.ஜெதீஸ்வரன். புண்ணிய சக்கரம் நூலில் பல பல பரிகாரங்கள் உண்டு. அதில் ஆலய பரிகாரங்களும் ஒன்று. இதில் பித்ரு தோஷம் நீக்கும். திருத்தலங்களை ஜீவநாடி கலையரசு வரிசைப்படுத்தி பரிகாரங்களாக தந்துள்ளார். அவற்றை முறைப்படி கடைபிடித்து வந்தாலே வாழ்க்கை வசப்படும் வருங்காலம் சுகப்படும். 
ஜோதிட கடலில் கிடைகரிதான அரியதொரு வலம்புரி முத்துதான் "புண்ணிய சக்கரம்" எனும் நூல். இந்நூலில் தரப்பட்டுள்ள பரிகாரங்களை அறிந்து, புரிந்து, தெளிந்து எல்லோரும் கடைபிடித்தால் பித்ரு தோஷ நிவாரணம் நிச்சயம். நிம்மதியின்றி அலையும் ஆன்மாக்கள் பித்ரு லோகம் அடைவது கச்சிதம். ஜோதிடர்கள் இப்படி அரிதாக வெளிவரும் நூலை வாங்கி அதன் பயனை அறிந்து பலனை பிறர்க்கும் கிடைக்கச் செய்தால் புண்ணியங்கள் புடைசூழ கைராசி ஜோதிடர் எனும் பாராட்டையும் பெறலாம். புண்ணிய சக்கரம் நூல் ஆன்மாவை அறிய முற்படுவோரும் மறுஜென்மத்தை ஆராயத் துடிப்போரும், ஆவி உலக ஆராய்ச்சியாளர்களும் நிச்சயம் வாங்கி படிக்க வேண்டிய ஒரு பொக்கிஷம். இதன் மூலம் பல காலம் அறியாமையால் பித்ரு கடன் செய்ய தவறியோர்கள் இறந்தவர் ஆன்மாவுக்கு தர்ப்பணம் சீரார்த்தங்களை முறைப்படி செய்து தங்கள் விதியை மாற்றி பித்ரு தோஷ நிவர்த்தி பெற்று இன்புற்று வாழ இந்நூல் பெரிது உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு:
http://www.apsaraepublications.com/review_3.php

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக