செவ்வாய், 29 டிசம்பர், 2015

ஜீவ நாடி கலையரசு எழுதிய காலக்கண்ணாடி எனும் நூல்


மனிதர்கள் வாழும் சூழ்நிலைகளும், சூழும் சந்தர்ப்பங்களும் நாளும் பாவ புண்ணியம் பறை சாற்றும் கர்மாவிற்கு காரண காரியம் கற்பிக்கும் விதியாகி விட அவ்விதியின் சூட்சுமத்தை விரிவாய் உதாரண ஜாதகங்களுடன் விளக்கும் அற்புத அனுபவக் கற்பகக் களஞ்சிய நூல்தான் "ஞானம் அருளும் காலக் கண்ணாடி" ஆகும். நவக்கிரகங்கள் ஆளும் பன்னிரு இராசிகளும் 27 நட்சத்திரங்களும் கூறும் விஞ்ஞானமும் பல கோடி மனிதர்களை வேறுபடுத்தி ஆளுக்கொரு கணக்கை கூறுபடுத்தி வைத்தாலும், தன் உபாசனை சித்தியாலும், பலகால தவ சக்தியாலும், தீவிர பக்தியாலும், தேர்ந்த அனுபவ யுக்தியாலும் குருமார்களின் அனுகிரகத்தாலும், ஸ்ரீஞான ஸ்கந்தப் பெருமானின் அருளாசியினாலும் தன் இறை ஞானத்தால் விதியான காலக்கண்ணாடியை ஒவ்வொரு ஜோதிடரும் அறிய, கற்றுத் தெரிய, உலகோர்க்கென "ஸ்ரீஸ்கந்த உபாசகர்" "ஜீவ நாடி கலையரசு" திரு.றி.ஞி.ஜெகதீஸ்வரன் அவர்கள் படைத்த பொக்கிஷம் தான் "ஞானம் அருளும் காலக்கண்ணாடி". 
ஜோதிடம் பயில்வோர் பல அரிய, புதிய, நூல்களை வாங்கி கற்றுத் தெளிந்து, பல பயிற்சி வகுப்புகளில் பயின்று பார்த்து, புரிந்து, புலனாய்ந்தும் கூட பலன் கூறுவது மட்டும் வருவதில்லை என விழிப்போர் குறை தீர்க்க வாங்கி படிக்க வேண்டிய நூல்தான் "ஞானம் அருளும் காலக்கண்ணாடி" இந்நூலில் "திறமையான ஜோதிடரை உருவாக்கும் சூட்சும கிரக நிலைகள்" எனும் தலைப்பில் "ஜீவநாடி கலையரசு" அவர்கள் தெள்ளத் தெளிவாய் பலக்கோணத்தில் ஆய்ந்து, ஆராய்ந்து, உதாரண ஜாதகங்கள் மூலம் உறுதிபட விளக்கி, ஒருவர் ஜோதிடராகும் அமைப்பு எதுயென விவரிக்கிறார். ஜோதிடராக வரவேண்டி பலகாலம் முயற்சி மேற்கொள்வோர்கள் முதலில் தங்கள் ஜாதகத்தில் மேற்கூறிய அமைப்பு உள்ளதா என உறுதி செய்துக் கொள்ள உதவுவது தான் "ஞானம் அருளும் காலக்கண்ணாடி" 
திருமுகமாய் "கிரகங்கள் பேசுகின்றன" என்ற தலைப்பின் கீழ் அணிவகுத்து வரும் நவக்கிரகங்கள் கொங்கு தமிழ் எழில் கொஞ்சி தங்களை பற்றி தாங்களே பேசுவது போல கூறும் தகவல்கள் மிக எளிமையாக அருமையாக நவகிரகங்களை பற்றித் தெரியாத பல புதிய விஷயங்களை அறிய பெரிதும் உதவுகிறது. 
பொதுவாக ஜாதகத்தில் மறைந்து இருக்கும் புலப்படாத மிக நுண்ணிய சூட்சுமமான விஷயங்களை சில ஜோதிடர்கள் ஆராயாமல் அஜாக்கிரதையால் கவனிக்காமல் தவற விடுவதின் விளைவு, நம்பி நாடி வரும் மக்கள் பல வேளைகளில் துன்பச் சகதியில் சிக்கி, எதிர்பாராத துயரச் சம்பவங்கள் நிகழ்ந்த பின்னே புலம்பும் துரதிஷ்டம் காண முடிகிறது. இக்குறையை நீக்கவே பல்லாயிரம் ஜாதகங்களில் உள்ள வேற்றுமையில் உள்ள ஒற்றுமையை கண்டு ஆராய்ந்து துள்ளிய பலன்களை சொல்லிட, மூல நூல்களில் கூறும் நெறிமுறைகளை வகுத்து வகைப்படுததியுள்ளார். திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள்.
இன்றைய காலக்கட்டத்தில், கலி ஓட்டவேகத்தில் பொருளாதார மேன்மை ஒன்றே பொருட்டென கண்மூடித்தனமாய் ஓடும் மனிதர்கள் காணும் மனநெருக்கடி மற்றும் சிறு விஷயத்தை கூட சீரிய முறையில் நோக்காது அவசர கோலத்தில் அள்ளித் தெளிந்து எடுக்கும் முடிவுகளின் தவறுகளால் தத்தளிப்பவர்கள், உறுதியில்லா மனநிலையின் தேடும் இறுதியான முட்டாள்தனமான முடிவு தான் தற்கொலையாகும். வரும் துன்பம் நூறாயிரம் கோடியானாலும் பரவாயில்லை "சும்மா இரு" என அருணகிரியாருக்கு, அழகு வேலன், பாலமுருகன் தந்த தத்துவ மந்திர உபதேச மொழியின் சூட்சுமம் பல பிரச்சனைகள் ஏற்படும்போது நாம் அமைதி காத்து பொறுமையுற்றாலே, அது காலப்போக்கில் தானே காணாமல் மாயமாய் போகும். இது புரியாது வீணே உயிரை விடக் கூடிய அமைப்பு எதுயென தெளிவாய் "தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் ஜாதகங்கள்" என்ற தலைப்பில் தற்கொலை செய்துக் கொள்ளும் அமைப்பினை உதாரண ஜாதகங்கள் மூலம் உவகையுடன் விவரிக்கிறார் குடி குடியை கெடுக்கும் என ஊருக்கு கொடி பிடித்து பேருக்கு போராடி சாடுவோர் கூட திரைமறைவில் தினம் போதையில் பாதை மாறுவது சர்வசாதாரணமாகிவிட்டது. ஆணுக்கு பெண் சமமென முழங்கிய, புரட்சிகவி பாரதியின் ஒற்றை வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு சில பெண்களும் வழிதவறுவதால் ஏற்படும் விபரீதம் தான் கொடுமை. போதை பழக்கத்திற்கு அடிமையாகும் அமைப்புகளை அழகாய் "போதை பழக்கம் பாதை மாறும் ஜாதகங்கள்" எனும் தலைப்பில் பலரும் பார்த்ததும் பலனறிய, பயனுற பாரோர்க்கு பறைசாற்றுகிறார். "திரு.ஜெகதீஸ்வரன்" அவர்கள். 
பெற்றோர்கள் தாங்கள் பட்ட கஷ்ட நஷ்டங்கள் தங்கள் பிள்ளைகள் படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் சகல விதமான வசதிகளும் செய்து தந்து ஆசைப்பட்ட செல்போன், லேப்டாப், பைக் என கேட்டது யாவும் கடனை உடனை வாங்கியாவது விரும்பிய கல்லூரியில் வேண்டிய படிப்பை கோரியபடி படிக்க அரும்பாடுபட்டு வைத்தாலும் உலகம் உணராத பிஞ்சுகள் கலகம் காணாத நெஞ்சில், நஞ்சாய் புகும் காதல், கத்தரிக்காயால் ஏற்படும் துன்பங்களால் சீரழியும் குடும்பங்கள் பல ஆயிரம். வளரும் வயதில் சுக்கிரன் ஆதிக்கத்தின் கீழ் வரும் செல்போன், லேப்டாப், பைக் மற்றும் இன்னும் பல ஆடம்பர விஷயங்கள் யாவும் எதிர்பாலரை ஈர்க்கும் சுக்கிரனின் காரகத்துவங்கள் என உணராத பெற்றோர்களின் அறியாமையால் பிள்ளைகளின் காதலால் ஏற்படும் அநியாய இழப்புகளை தடுக்க "விரும்பியனுடன் ஓடிபோகும் விபரித ஜாதக அமைப்பு" என்ற தலைப்பில் உதாரண ஜாதகங்கள் மூலம் தெளிவாய் ஜோதிடர்கள் உணர விரிவாய் விளக்கியுள்ளார். 
"மனதை ஆளும் மானசீக கிரகங்கள்" என்ற தலைப்பில் குணம் கெட்டு நாளும் திரிவோர் விதியாவும் மதியான மனதை ஆளும் சந்திரன் மற்றும் புத்தியை குறிக்கும் புதனின் பாதிப்பால் என்று 5ஆம் இட ஆராய்ச்சி மூலம் தசாபுத்தி தரும் அரிதான தெரியாத பல விஞ்ஞான விபரங்களை, கோச்சார சனிபகவானின் கோரங்களை மெய்ஞான முறையில் வரிசைப்படுத்துகிறார். பரிகாரங்கள் பலனளிக்காத காரணம் திரிகோண ஸ்தானமான 1,5,9ஆம் இடம் பாதிக்கப்பட்டு கெடுவதின் காரணமே என அரியத் தகவலை அற்புதமாக தந்துதவுகிறார். "ஆட்டி படைப்பது 6ஆம் இடமோ, 8ஆம் இடமோ" என்ற தலைப்பில் சஷ்ட அஷ்டஸ்தானங்களின் துஷ்ட பரிமாணங்களால் வரும் கஷ்டநஷ்டங்களை விவரிக்கிறார். திருமணம் யோகமாக நல்லதொரு குடும்பம் அமைய உறுதுணையாகும் 2ஆம் பாவப்பலன்களை "இல்லற பாவம் இயங்க வைத்திடும் சுபாவம்" என்ற தலைப்பில் "திருமண வாழ்வு திருப்புமுனையாகும் நிகழ்வு" யாருக்கு? என யாதார்த்தத்தை இயல்பாய் அடுக்குகிறார் திரு.ஜீவநாடி கலையரசு. 
"ஸ்தானமும் கிரக காரக யோக நிலைகள்" என்ற தலைப்பின் கீழ் பல உபதலைப்புகள் கொண்ட ஆராய்ச்சி கட்டுரைகள் நவக்கிரகங்களின் இராஜயோக அமைப்புகளை விளக்குகிறது. புகழைத் தரும் 10ஆம் இட புதையல் தொழில்கள் என்ற தலைப்பின் மூலம் தொழில்கள் மூலம் பேரும் புகழும் பெற்றுத் தரும் அமைப்புகளை எடுத்துரைக்கிறார். இறுதியாய் மந்திரசித்திகள் அருளும் தந்திரயோக பிரயோகங்கள் தலைப்பில் சித்தர்களை பற்றியும் ஜீவ சமாதி மற்றும் அருட்சாதனங்களின் அருமை பெருமையை கூறும் கிரக நிலைகளை போற்றுகிறார். 
இப்படி தான் பெற்ற சகல விதமான ஞானத்தையும் காலக்கண்ணாடியான ஜாதகத்தை யாவரும் சரியாக பார்த்து பலன் கூறவேண்டும் என்ற நல்லதொரு எண்ணத்தில் தூய்மை உள்ளத்தில் படைக்கப்பட்ட நூல் தான் "ஞானம் அருளும் காலக்கண்ணாடி" இந்நூலின் சிறப்பு இதில் வெளியியடப்பட்ட ஏராளமான உதாரண ஜாதகங்களும் பளிங்காய் துலங்கும் விளக்கங்களும் தான். திரு. ஜெகதீஸ்வரன் அவர்கள் தன் அனுபவத்தில் பார்த்த ஜாதகங்களின் தொகுப்பை பெயர்களை வெளியிடாது விதியின் சாராம்சத்தை மட்டும் தந்துள்ளார். "ஞானம் அருளும் காலக்கண்ணாடி" ஜோதிடர்களின் அருட்பெரும் சொத்து கிடைக்கரிதான ஞானவித்து ஜோதிட அன்பர்கள் வாங்கி பயனுற்று வாக்குபலிதம் பெற வாழ்த்துக்கள்.
மேலும் விவரங்களுக்கு
http://www.apsaraepublications.com/books.php

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக