20.12.2015
ஞாயிற்றுக்கிழமை அன்று கழுகுமலையில் மூன்றாம் ஆண்டு மலர்க்காவடிப் பெருவிழா சிரவை
ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக
நடைபெற்றது. இந்த விழாவில் மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்
அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.குழந்தைகள், பெண்கள். பெரியவர்கள் என
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மலர்க்காவடி விழாவில் கலந்து கொண்டும்,
மலர்க்காவடிகளை எடுத்து கழுகு மலையை கிரிவலம் வந்தும் பின்பு உற்சவருக்கு அந்த
மலர்களைச் சொறிந்து சிறப்பு வழிபாடுகள் செய்தும் கோலாகலமாக இந்த மலர்க்காவடி
விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். சிரவை ஆதீனம் மற்றும் பொம்மபுர ஆதீனம் ஆகிய
இரண்டு குரு மஹா சந்நிதானங்களும் மிகச்சிறப்பாக அருளுரை நிகழ்த்தி வந்திருந்த
மக்களுக்கு மெய்சிர்க்கும் வண்ணம் அருளாசி வழங்கி விழாவைச் சிறப்பு செய்தார்கள்.
நமது அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் சார்பாக ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுடன் சில
அடியார்களும் இந்த மலர்க்காவடிப் பெருவிழாவில் கலந்து கொண்டார்கள். முருகப்
பெருமான் மீது பக்தி பெருக்குடன் மக்கள் அரோஹரா கோஷம் இட்டும் இரண்டு குரு மஹா சந்நிதானங்களின்
ஆசியைப் பெற்றும் அமைந்த இந்த நிகழ்வைக் கானும்போது ஒருவனுக்கு இந்திர லோகம்
கிடைத்தாலும் வேண்டாம் இந்த கழுகுமலை காவடிப்பெருவிழா தரிசனம் ஒன்றே போதும் என்று
சொல்லும் அளவிற்கு மிகச் சிறப்பாக இந்த மலர்க்காவடிப் பெருவிழா அமைந்தது எனலாம்.
அதன் சில படங்களை நமது கௌமாரபயணம் வாசகர்களுக்காக இங்கு வெளியிடுகின்றோம்.
மலர்க்காவடி விழாவில் அருளுரையாற்றும் மயிலம் ஆதீனம் அவர்கள்
மலர்க்காவடி விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்
மலர்க்காவடி விழாவில் காவடி எடுத்த பக்தர்கள்
இந்த மலர்க்காவடிப்
பெருவிழாவில் இரண்டு குரு மஹா சந்நிதானங்களும் மிகச்சிறப்பாக அருளுரை
வழங்கினார்கள். அதைப்பற்றிய விரிவான பதிவு ஒன்று விரைவில் வெளிவரும்.
நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர
சுவாமிகள் அவர்கள்
என்றும் அன்புடன்
ஸ்ரீஸ்கந்த
உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம்,
அந்தியூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக