ஈரோடு மாவட்டம் அந்தியூர் அங்காளம்மன் ஆலய மண்டல பூஜை நிறைவு விழா 13.12.2015, ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த விழாவிற்கு எமது ஞானதேசிகர் சிரவை ஆதீனம், முனைவர்,தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் எழுந்தருளி பூஜையை சங்காபிஷேகத்தோடு நிறைவு செய்து வைத்தார்கள். சிரவை ஆதீன நற்பணி மன்றத்தார்கள், ஓதுவார்கள் அம்மனை செந்தமிழ் மந்திரங்களால் குளிர்வித்து பூஜை செய்தார்கள். மாலை இட்டு மேள தாளம் முழங்க எமது ஞானதேசிகர் சிரவை ஆதீனம் அவர்களை கோவில் நிர்வாகத்தினர் பூரண மரியாதையோடு அழைத்து வந்தனர். அங்கு குழுமியிருந்த மக்கள் அனைவரும் எமது ஞானதேசிகர் சிரவை ஆதீனம் அவர்களை வணங்கி ஆசி பெற்றனர். அந்த சந்திரன் பூமிக்கு எழுந்தருளியது போல் எமது ஞானதேசிகர் சிரவை ஆதீனம் அவர்களின் முகப்பொலிவு இருந்தது. அடியேனும் இந்த பூஜையில் கலந்து கொள்ளும் பேறு கிடைத்தது, அவ்வளவு கூட்டத்திலும் ஓதுவார் அவர்கள் எம்மை அடையாளம் கண்டு தனது அருகில் அழைத்து அமர வைத்தார்கள். அவருக்கு இந்த நேரத்தில் எமது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.மண்டல பூஜை நிறைவு விழாவின் சில காட்சிகள்.
சூலம் வடிவில் காட்சி தரும் சங்கு பூஜை
பூர்ணாகுதி பூஜை செய்யும் எம் ஞானதேசிகர் சிரவை ஆதீனம் அவர்கள்
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!
என்றும் என் ஞானதேசிகர் சேவையில்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக