வெள்ளி, 18 டிசம்பர், 2015

கௌமார மடாலயம் வழங்கிய கடலூர் வெள்ள நிவாரணம்

ரூ.பத்து இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கௌமார மடாலயத்திலிருந்து  நேற்று 17.12.2015 வியாழக்கிழமை மார்கழி 1ம் தேதியில் கடலூருக்கு அனுப்பி வைக்கப் பெற்றது. கௌமார மடாலயம் சார்ந்த கல்வி நிறுவனங்கள்,அறக்கட்டளைகள்,தென்சேரிமலை திருமட கல்வி நிறுவனம்,கவுண்டம்பாளையம் சிவநகர் தொண்டர்கள்,இலண்டன் வாழ் இலங்கைத் தமிழர்கள் இந்த நிவாரணத்திற்கு பெரும் உதவி செய்துள்ளனர் என்று சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று தாமே அவ்விதம் வாழ்ந்து காட்டி இது போல் பல சேவைகளை சத்தமில்லாமல் எமது ஞானதேசிகர் சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் செய்து வருகின்றார்கள். ஆனைமலை உள்ளிட்ட கோவில்களில் அம்மன் பிரார்த்தனையில் வந்து குவிந்திருந்த புடவைகளை எமது ஞானதேசிகர் சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களின் வேண்டுகோளை ஏற்று பத்தாயிரம் புடவைகள் கடலூருக்கும், பத்தாயிரம் புடவைகள் சென்னைக்கும் நிவாரணத்திற்கு லாரி மூலம் அனுப்பட்டது நினைவிருக்கலாம். அதற்கெனெ ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக கௌமார மடாலயம் பல அன்பர்களுடன் இணைந்து இந்த நிவாரணப்பொருட்களை அனுப்பும் பணி நடந்திருக்கின்றது. எனது குருவின் செயல்களை இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கிலும் நிவாரணப் பொருட்களை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களைக் கௌரவப் படுத்தும் நோக்கிலும் இந்தப் பதிவை எழுதுகின்றேன். இந்த நிவாரணப் பொருட்களை அளித்த அனைவரும் எமது ஞானதேசிகர் சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களின் குருவருளையும் தண்டபாணிக்கடவுளின் திருவருளையும் பெற்று நீடூழி வாழ எம் ஞானதேசிகர் பாதம் போற்றுகின்றேன்.

படங்கள்:



ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!
நன்றி: எமது ஞானதேசிகர் சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
என்றும் அன்புடன்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக