திங்கள், 16 நவம்பர், 2015

கௌமார மடாலயத்தில் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் குரு பூஜை !


                                                 தவத்திரு கந்தசாமி சுவாமிகள்
  • மன்மத ஆண்டு கார்த்திகைத் திங்கள் 7ம் நாள் 23.11.2015 திங்கட் கிழைமை காலை 10 மணி அளவில் கோவை சரவணம்பட்டியில் உள்ள கௌமார மடாலயத்தில் சிரவை ஆதீனம் இரண்டாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்களின் 67 வது குரு பூஜை விழா கௌமார மடாலய சமாதி  நிலையத்தில் சிரவை ஆதீனம் நான்காம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களால் சிறப்பாக நடைபெற உள்ளது.
  • குரு பூஜை- அபிசேகம்,பூஜை, அடியார்தமை அமுது செய்வித்தலோடு நடைபெறுகின்றது.
  • 18.4.1892 அன்று நமது தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள் அவதரித்தார்கள்.
  • சிரவை ஆதீன ஆதி குரு முதல்வர் தவத்திரு ராமானந்த சுவாமிகள் தனது காலத்திலேயே இரண்டாம் குரு மஹா சந்நிதாங்களாக தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்களை நியமித்தார்கள்.
  • 29.1.1923 அன்று தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள் பழனியில் அருளாட்சி ஏற்று சிரவை ஆதீனம் இரண்டாம் குரு மஹா சந்நிதானமாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
  • எல்லாப் புலவர்களும் கடவுள் வாழ்த்து மற்றும் காப்புச் செய்யுள்களில் இறைவனைக் காப்பாக இருக்குமாறு பாடுவர் ஆனால் இவர் தனது குரு நாதரான தவத்திரு ராமானந்த சுவாமிகளைக் காப்புச் செய்யுளில் பாடி குருவே பரம் பொருள் எனும் கௌமார நெறிக்குச் சான்றாக தவத்திரு கந்தசாமி சுவாமிகள் இருந்தார்கள்.
  • ஏராளமான தலங்களுக்கு பல பாடல்களைப் பாடிக் கொடுத்தவர், அதேபோல் சுமார் 50 ஆயிரம் பாடல்களைப் புனைந்தவர் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் என்பதால் கொங்கு நாட்டு கச்சியப்பர் எனும் சிறப்பைப் பெற்றுத் திகழ்ந்தார்கள். பக்த மான்மியம் எனும் வைணவ அடியார்களின் நூல் இவரது படைப்பின் திறமைக்குச் சான்றாக உள்ளது.
  • தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள் பாடிய பல பாடல்களை ஆய்வு செய்து தற்போதைய சிரவை அதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றார்கள்.
  • கொல்லாமையைத் தீவிரமாகக் கடைபிடிக்க அறிவுறித்தியவர் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள்.
  • ஏதேனும் ஆலயம் செல்லும் போது பலி இட இருக்கும் ஆடுகளைத் பலியிடக்கூடாது என தடுத்து நிறுத்தி அந்த ஆடுகளை உரிய விலை கொடுத்து வாங்கி விடுவித்து கொல்லாமை எனும் கௌமார நெறியைப் பிறழாமல் கடைபிடித்தவர் நமது தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள்.
  • அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் தமிழ் அலங்காரம், வேல் அலங்காரம் எனும் பாடல்களைப் போல் கோவையில் சிறந்த தலமாக விளங்கும் மருதமலைக்கு மருதமலை அலங்காரம் எனும் பாடல்களை இயற்றி மகிழ்ச்சி கண்டவர் நமது தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள்.
  • பிராப்தம் இருக்கும் கௌமார பயண வாசகர்கள் இந்த குரு பூஜை விழாவில் கலந்து கொண்டு குருவருளையும் திருவருளையும் பெற அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
  • 10.12.1948 அன்று சிரவை ஆதீன ஆதி குரு முதல்வர் தவத்திரு ராமானந்த சுவாமிகள் முன்னிலையிலேயே தனது ஆன்மாவை குரு ஜோதியில் கலந்து தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள் வீடுபேறு அடைந்தார்கள்.
  • கௌமார மடாலயத்தில் உள்ள சமாதி நிலையத்தில் இன்றளவும் ஜீவ நிலையில் இருந்து கொண்டு அங்கு வருகின்ற பக்தர்களுக்கும், கௌமாரச் செல்வர்களுக்கும் அருள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.
  • கடந்த 66 ஆண்டுகள் மிகச்சிறப்பான முறையில் குரு பூஜை நட்த்தப்பட்டு இப்போது 67 வது குரு பூஜை விழா ஏற்பாடாகி உள்ளது.
  • கௌமாரம் எனும் நெறியைக் கடை பிடிக்கும் ஒவ்வொருவரும், அதேபோல் கொங்கு மண்டலத்தில் பிறந்த ஒவொவொருவரும் நிச்சயமாக இந்த குரு பூஜை விழாவில் கலந்து கொள்வதை தமது கடமையாகக் கொள்ள வேண்டும்.
நன்றி: சிரவை அதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள்அவர்கள், தலைவர், கௌமார மடாலயம்.





என்றென்றும்,
குருவின் சேவையில்,
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.



ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக