வெள்ளி, 13 நவம்பர், 2015

ஆன்மிகத்தின் கலங்கரை விளக்கமாக கொங்கு மண்டலம் !

ஆன்மிகத்தின் கலங்கரை விளக்கமாக கொங்கு மண்டலம் திகழ்வதாக கேரள ஆளுநர் ப.சதாசிவம் பேச்சு

விழாவில் பேசுகிறார் கேரள ஆளுநர் ப.சதாசிவம், உடன் (இடமிருந்து) ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் கி.ராமசாமி, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிலையங்களின் தலைவர் ச.மலர்விழி, கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், திருவாவடுதுறை ஆதீனம் இருபத்து நான்காவது குருமகா சந்நிதானம், பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், பண்ணாரியம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், சக்தி குழுமங்களின் தலைவர் ம.மாணிக்கம், கே.எம்.சி.ஹெச்.மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்லா ஜி.பழனிச்சாமி, செந்தில் குழுமங்களின் தலைவர் ஓ.ஆறுமுகசாமி உள்ளிட்டோர்.

கோவை பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் 91-ஆவது ஆண்டு நாண் மங்கல விழாவின் இறுதி நாள் விழா, பேரூர் தமிழ்க் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் இருபத்து நான்காவது குருமகா சந்நிதானம் தலைமை வகித்தார். பண்ணாரியம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் வரவேற்றார். கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் முன்னிலை வகித்தார்.

இதில், பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அறக்கட்டளை மருத்துவ மையத் திட்டக் கல்வெட்டைத் திறந்து வைத்து கேரள ஆளுநர் ப.சதாசிவம் பேசியதாவது: நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக பேரூராதீனத்தின் சார்பில் சமய, சமுதாய, இலக்கியப் பணிகள் நடைபெற்று வருகிறது. உலக சைவ மாநாடு, துறவியர் மாநாடு, உலகத் தெய்வத் தமிழ் மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகள், கருத்தரங்குகள் பேரூராதீனத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. 

அமெரிக்கா, மோரீஷஸ், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, மலேசியா, இலங்கை என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களும், சிவனடியார்களும் வந்து செல்லும் இடமாகத் திகழ்கிறது. பேரூராதீனத்தின் இந்தச் சேவைகளால் கொங்கு மண்டலம் ஆன்மிகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தனது சமய சொற்பொழிவாலும், "அடிகள் அருளமுதம்' என்ற தொடர் கட்டுரையாலும், தமிழ் உணர்வாளர்களையும், அடியார்களையும் வீறு கொண்டு எழச் செய்தவர். மண்டைக்காடு மதக் கலவரத்தின்போது, அமைதியை நிலை நாட்ட அரும்பாடுபட்டார். 

கோவை மத்திய சிறைச் சாலையில் அறநெறி வகுப்புகள் நடத்தி சிறைவாசிகளின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். கோவை மத்திய சிறையில் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி. இழுத்த மரச்செக்கை உலகறியச் செய்த பெருமையும் பேரூராதீனத்தையே சாரும். சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆதிசேஷையாவுடன் வாதிட்டு, தமிழ்த்துறை பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வைப் பெற்றுத் தந்தவர் பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் என்றார் சதாசிவம்.
நன்றி: தினமணி நாளிதழ்

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக