கோவை,சின்னவேடம்பட்டி, கவுமார மடாலய கஜ பூஜை வெள்ளி விழா 22.3.2012 முதல் 25.3.2012 ம் தேதி வரை சிறப்பாக நடந்தது. கடந்த 1987ம் ஆண்டு சிரவை ஆதீனம் மூன்றாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு.சுந்தர சுவாமிகள் அவர்கள் 108 ஆண் யானைகளை கொண்டு உலக நலனுக்காக கஜ பூஜை நடத்தினார்கள். இதன் 25ம் ஆண்டு வெள்ளி விழாவில், யானைகளை வைத்து கஜ பூஜை, 108 பசுக்களை வைத்து பசுத்தாய் வழிபாடு, 1008 திருவிளக்கு வழிபாடு, 63 நாயன்மார்களை எழுந்தருளிவித்தல், சுந்தர சுவாமிகள் சிலை திறப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் சிரவை ஆதீனம் நான்காம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு. குமர குருபர சுவாமிகளால் சிறப்பாக நடத்தப்பட்டது. அந்த வெள்ளி விழா நினைவாக சீர்மிகு சிரவை ஆதீனம் எனும் கௌமார மடாலய வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு கௌமார பயண நண்பரகளும் முருக பக்தர்களும் படிக்க வேண்டிய ஒரு உன்னத நூல். பிராப்தம் இருப்பவர்கள் அந்த நூலைப் படித்து கௌமார மடத்தின் பெருமைகளை உணரலாம்.
நன்றி: சிரவை ஆதீனம்,தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
குருவின் சேவையில்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக