திங்கள், 30 நவம்பர், 2015

சீர்வளர்சீர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார்!



சீர்வளர்சீர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார்!

அடிகளார் அவர்களின் பிறப்பு புண்ணியப்பிறப்பு எனப் போற்றத்தக்கதாகும். இவர் பிறந்த ஊர் அவிநாசி வட்டம் முதலிபாளையம் என்னும் ஊராகும். இவருடைய தந்தையார் தவத்திரு. சிவராமசாமி அடிகள் என்றும் பெயரினர்; இவர் சிரவணபுரம் கௌமார மடாலயத்தைத் தோற்றுவித்த தவத்திரு. இராமனாந்த அடிகளோடு தொடர்புடையவர். கீரணத்தம் தவத்திரு மருதாசல அடிகளைக் குருவாகக் கொண்டவர்.இராமனந்த அடிகளையும் மருதாசல அடிகளையும் தமது தோட்டத்தில் தங்கியிருக்கச் செய்து பணிவிடை புரிந்து அவர்களாலேயே விநாயகப் பெருமான் திருக்கோயில் அமைத்துக் கொடுக்கப்பெற்று விநாயகர் வழிபாடும் வேற்பூசையும் செய்து வந்தவர்கள். தவத்திரு சிவராமசாமி அடிகள் ஆவார். இவருடைய அருட்துணைவியராக அமைந்த கப்பிணி அம்மையார், கணவனாருடைய சமயநெறி வாழ்வுக்கு உறுதுணையாய் ‘மனையறத்தின் வேராய்’ அமைந்து விளங்கியவர்கள். இப்பெற்றோர்களின் பெருமையினையும் புண்ணியத்தினையும் விளக்கும் படியாக இவர்களுக்கு மூன்றாவது மகவாகக் குரோதன ஆண்டு புராட்டாசித் திங்கள் மகம் நாளில் அவதரித்தார், நமது அடிகளார். இவரது பிறப்பு “தவஞ்செய்த நற்சார்பில் வந்துதித்த ஞானத்தை நண்ணுதல்எனவரும் மெய்கணாரின் திருவாக்கிற்கு ஏற்பத் தோன்றிய அருட்பிறப்பாகும்.

      அடிகளார் அவர்கள் வழக்கப்படியே இளமையில் தொடக்கக் கல்வி கற்றுத் தமது 15ஆவது வயதில் 1941ஆம் ஆண்டு சிரவணபுரம் கௌமார மடாலயத்திற்கு வந்து மடாலயத் திருப்பணிகள் செய்து வரலாயினர். நாளடைவில் தவத்திரு. இராமானந்த அடிகளின் திருவருளுக்குரியவராய் அவருக்கு அணுக்கத் தொண்டராக இருக்கும் பேறு பெற்றனர். அங்கு தவத்திரு. கந்தசாமி அடிகளிடம் சமய இலக்கியங்களைக் கற்றுணர்ந்தார்; கவிபாடுவதிலும் வல்லவரானார்.

  
      நன்றி: சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் ஸ்வாமிகள் அவர்கள் 

                          
                         ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                              சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக