திங்கள், 30 நவம்பர், 2015

கௌமார மடாலயத்தில் 110வது சைவ சித்தாந்த மாநாடு நடந்தது

கோவை : சரவணம்பட்டி சிரவையாதீனம், சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றம் சார்பில், 110வது சைவ சித்தாந்த மாநாடு கோவை கவுமாரமடாலயத்தில் 14.05.2015 அன்று துவங்கியது.
ஞானியர் சுவாமி, மறைமலை அடிகள் ஆகியோரால், 1905ம் ஆண்டு சைவசித்தாந்த பெருமன்றம் துவங்கப்பட்டது. இதன், 110ம் ஆண்டு விழா, சின்னவேடம்பட்டி கவுமாரமடாலயத்தில் 14.05.2015 அன்று துவங்கப்பட்டது.
முதல் நாள் நிகழ்ச்சியில், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், கந்தசாமி சுவாமிகள், நம்மைபேணும் அம்மை, சிரவையாதீன வரலாறு உள்ளிட்ட பல்வேறு சைவ நுால்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில், பேரூராதீனம் இளையபட்டம் மருதாசல அடிகள், பொம்மபுரஆதீனம் சிவஞானபாலய சுவாமி, தென்சேரிமலையாதீனம் முத்துசிவராமசாமி சுவாமி அடிகளார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரண்டாம் நாளான 15.05.2015 அன்று சைவமகளிர் மாநாடும், மதியம் சைவ இளைஞர் மாநாடும் நடந்தது. 16.05.2015 அன்று மூன்றாவது நாளில் சைவர் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. இது போல் ஏராளமான நிகழ்ச்சிகளை நமது குரு நாதர் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் சிறப்பாக நட்த்தி தமிழுக்கும், சமயத்திற்கும் அரும் தொண்டாற்றி வருகின்றார்கள்.
 நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள்
நன்றி: தினமலர்
என்றும் குரு சேவையில்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன்

ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக