புதன், 18 நவம்பர், 2015

கௌமார மடாலயத்தில் கஜ பூஜை சுந்தர சுவாமிகள் திருஅவதார விழா !


  • கோவை கௌமார மடாலயத்தில் சிரவை ஆதீனம் மூன்றாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு. கஜ பூஜை சுந்தர சுவாமிகளின் 87 வது திருஅவதார விழா மன்மத ஆண்டு கார்த்திகைத் திங்கள் 23ம் நாள் 09.12.2015 புதன் கிழமை அன்று கௌமார சபையில் உள்ள முப்பரும் சமாதி வளாகத்தில் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகளால் சிறப்பாக நடத்தப்பட இருக்கின்றது.

  • 29.11.1929 அன்று தவத்திரு. கஜ பூஜை சுந்தர சுவாமிகள் திருஅவதாரம் நிகழ்ந்தது.
  • சிரவை ஆதீனம் இரண்டாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு கந்தசாமி சுவாமிகளிடம் தமிழின் அதீத நுனுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்கள் கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள்.
  • பேரூர் சாந்தலிங்கர் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார்கள்.
  • அதே கல்லூரியில் தமிழ்ப் பேராசியராகப் பணியாற்றினார்கள்.
  • தமிழ் மீது கொண்ட அன்பினால் 34 தலங்களைப் போற்றி 798 பாடல்களை இயற்றினார்கள்
  • சுவாமிகள் பாடிய பாடல்களின் தொகுப்பு சுந்தரர் சொற்றமிழ் என வழங்கப்படுகின்றது.
  • சென்ற நூற்றாண்டின் சிறந்த சமயச் சொற்பொழிவாளராகவும் சுவாமிகள் திகழ்ந்தார்கள்.
  • பெரிய புராணாத்தின் மீது பெருங்காதல் கொண்டு விளங்கிய சுவாமிகள் தனது அனைத்து சொற்பொழிவுகளிலும் பெரிய புராணப் பாடல்களை மேற்கோள் காட்டி மகிழ்ந்தார்கள்.
  • 09.12.964 அன்று சிரவை ஆதீனம் மூன்றாம் குரு மஹா சந்நிதானமாக தவத்திரு. கஜ பூஜை சுந்தர சுவாமிகள் பழனியில் அருளாட்சி ஏற்றார்கள்.
  • அவினாசி, திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில், கரூர்-வெஞ்சமாக்கூடல், திருச்செங்கோடு, அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா தாமரைக்கோவில், கௌமார மடாலயத் திருப்பணிகள் என அளவு கடந்த பல கோவில் திருப்பணிகளைச் செய்தவர் சுந்தர சுவாமிகள் அவர்கள்.
  • ஏராளமான ஆலயக் குடமுழுக்குகளை திரு நெறிய தெய்வத் தீந்தமிழ் மந்திரங்களைக் கொண்டு சிறப்பாக நடத்தியவர் நம் சுந்தர சுவாமிகள் அவர்கள்.
  • .எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக 108 ஆண் யானைகள், 108 வேள்வி குண்டம், 108 வேள்வி செய்பவர்கள் ஆகியவற்றைக் கொண்டு கௌமார மடாலயத்தில் மிகச்சிறப்பாக உலகப் பெரும் வேள்வி ஒன்றை நடத்தி  நமது கொங்கு நாடிற்குப் பெருமை சேர்த்ததோடு கௌமார சமயத்தை உலகம் அறியச் செய்தவர் தவத்திரு.சுந்தர சுவாமிகள் அவர்கள்.

                    படம்: தவத்திரு.கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள்

  • அப்போது ஆட்சியில் முதல்வராக இருந்த எம்.ஜி,ஆர் அவர்கள் இந்த உலகப் பெரும் வேள்விக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்ததோடு அப்போதைய கோவை கலெக்டர் முழு ஆதரவையும் கொடுத்து இந்த உலகப் பெரும் வேள்விக்கு உரிய சேவை செய்து மகிழ்ந்தனர்.
  • காங்கேயம் அருகே சிலம்ப கவுண்டன் வலசு எனும் ஊரில் பூஜையில்லாமல் இருந்த அவினாசியப்பர் கருணாம்பிகை கோவிலை அப்படியே பெயர்தெடுத்துக் கொண்டுபோய் கௌமார மடாலயத்தில் கோவிலாகச் செய்தவர் சுந்தர சுவாமிகள் அவர்கள்.
  • அவினாசி தேர், ஆவிடையார் கோவில் தேர், கௌமார மடாலயத் தேர் என தேர்த் திருப்பணிகளையும் செய்து மகிழ்ந்தவர் சுந்தர சுவாமிகள் அவர்கள்.
  • திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர் நமது சுந்தர சுவாமிகள் அவர்கள்.
  • இவரது இத்தகைய திருப்பணிகளைப் பார்த்துவிட்டு வாரியார் சுவாமிகள் உட்பட பல்வேறு பெரியோர்கள் அனைவரும் சுந்தர சுவாமிகள் அவர்களை திருப்பணிச் சக்ரவர்த்தி என்றும் அலங்காரச் சக்ரவர்த்தி என்றும் அழைத்து மகிழ்ந்தனர்.
                      படம்: தவத்திரு.கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள்

  • இத்தகைய சிறப்புக் கொண்ட தவத்திரு.சுந்தர சுவாமிகள் அவர்கள் 14.06.1994 அன்று தனது குருவடி நிழலில் இரண்டறக் கலந்தார்கள்.
  • அதே நாளில் தவத்திரு. குருமர குருபர சுவாமிகள் அவர்கள் சிரவை ஆதீன நான்காம் குரு மஹா சந்நிதானமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அப்போது அவருக்கு வயது 24.
  • தவத்திரு.சுந்தர சுவாமிகள் அவர்கள்தான் தவத்திரு. குருமர குருபர சுவாமிகள் அவர்களுக்கு ஞானகுரு, ஞான ஆசிரியன், உபதேச குரு, தீட்சை குரு எல்லாமே.
  • தவத்திரு.சுந்தர சுவாமிகள் அவர்கள் காட்டிய அதே வழியில் குளிர்ச்சி பொருந்திய முகத்தோடு, கருணையான உள்ளத்தோடு ஒரு உற்சவர் சிலை போலவே தினமும் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கௌமார நெறியைப் போதித்துக் கண்ணியமாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் தவத்திரு. குருமர குருபர சுவாமிகள் அவர்கள்.

படம்: அப்துல் கலாம் அவர்களுடன் தவத்திரு. குருமர குருபர சுவாமிகள் அவர்கள்


  • இது நாள்வரை அடியேன் பழகிய பல மஹான்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் தவத்திரு. குருமர குருபர சுவாமிகள் அவர்கள். அதேபோல் எனக்கு தீட்சை குருவும், உபதேச குருவும் தவத்திரு. குருமர குருபர சுவாமிகள் அவர்கள்தான்.
  • இத்தனை சிறப்புகள் கொண்ட தவத்திரு.சுந்தர சுவாமிகள் அவர்களுக்கு 87 வது திருஅவதார விழா மன்மத ஆண்டு கார்த்திகைத் திங்கள் 23ம் நாள் 09.12.2015 புதன் கிழமை அன்று கௌமார சபையில் உள்ள முப்பரும் சமாதி வளாகத்தில் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகளால் சிறப்பாக நடத்தப்பட இருக்கின்றது.
  • பிராப்தம் இருக்கும் கௌமார பயண வாசகர்கள் இந்த கோவை கௌமார மடாலத்தில்  நடக்க இருக்கின்ற இந்த விழாவில் கலந்து கொண்டு குருவருளையும் திருவருளையும் பெற அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
  • கௌமார பயண வாசகர்கள் தனது வாழ் நாளில் ஒரு முறையேனும் கௌமார மடாலய தரிசனம் கொள்ள வேண்டும். அதற்கு இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ளவே இறைவன் உங்களுக்கு இதைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்பது எனது கருத்து.



நன்றி: சிரவை அதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள், தலைவர், கௌமார மடாலயம்.



                                           “ஸ்ரீ ஸ்கந்த உபாசகர்” ஜெகதீஸ்வரன் சுவாமிகள்  அவர்கள்       

என்றென்றும்,
குருவின் சேவையில்,
இந்தக் கட்டுரையை எழுதியவர்: 
 
“ஸ்ரீ ஸ்கந்த உபாசகர்” P.D.ஜெகதீஸ்வரன் அவர்கள்,
நிர்வாக நிலைக்குழுத் தலைவர், அப்ஸரா பப்ளிகேசன்ஸ், சென்னை.
துணை ஆசிரியர்: குருவருள் ஜோதிடம், திருவருள் சக்தி மாத இதழ்,
நூல் ஆசிரியர்: ஞானம் அருளும் காலக் கண்ணாடி, புண்ணிய சக்கரம், திம்ப சக்கரம் ஆகிய மூன்று நூல்கள்
ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடி நல்லுரைஞர்,
தலைவர், ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
ஈரோடு மாவட்டம்.


                                 ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                                          சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக