சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களுடன் சாந்தி விஸ்வ நாதன் அவர்களும் நேற்று காலை புதுக்கோட்டை அருகில் உள்ள ஆவுடையார் கோவிலைத்தரிசனம் செய்தார்கள். கோவில் வழிகாட்டி ஒருவர் சிரவை ஆதீனம் முன்றாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு கஜ பூஜை சுந்தர
சுவாமிகளால் ஆவுடையார் கோவிலுக்குச் செய்யப்பட்ட திருப்பணி விவரங்களை தவத்திரு. குமர குருபர சுவாமிகளிடம் சொல்ல சுவாமிகள் மனம் மகிழ்ந்தார்கள்.
பொறியாளர் பொன்னுசாமி என்பவர் அந்த ஆலயத்தின் கலைச் சிற்பங்களைப் பார்த்து அசந்துபோனார்கள். ஒரு கல் எந்தவித ஆதரவும் இல்லாமல் அப்படியே சுழல்கிறது. அந்த தகவல்களையெல்லாம் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளிடம் சிரவை ஆதீனம் அவர்கள் தெரிவித்து மகிழ்ந்தார்கள். அந்த தகவல்களை அப்படியே நமது கௌமாரப்பயணம் வாசகர்களுக்கு இங்கு வெளியிடுகின்றோம்.
படம்: சிரவை ஆதீனம் முன்றாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள்
திருப்பெருந்துறை திருக்கோயிலுக்கு நமது சிரவை ஆதீனம் மூன்றாம் குரு மஹா சந்நிதானம் கஜ பூஜை சுந்தர சுவாமிகள் சந்நிதானங்களுடன் ஐம்பது முறையும் அதன் பின்பு இருபத்து ஐந்து முறையும் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் சென்றுள்ளார்கள்.ஆண்டுதோறும் தேருக்கு ஆனி மாதம் மகம் அன்று சென்றுவருகின்றார்கள். கொடுக்கப்பட்டுள்ள ஒரு படத்தில் இரு துளைகள் இருக்கும்.
அதுமரமா அல்லது கல்லா எனச் சோதிக்க வெள்ளைக்காரன் துப்பாக்கியால் சுட்ட துளையாகும்.கோயில் சிற்பங்களில் உள்ள வேலைப்பாடுகள் உடன் உள்ளது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு தூண்களுகளுக்கும் ஒரு உதிரித்தூண்களும் செய்து வைத்துள்னர்.திருப்பணி செய்த போது பூமிக்கடியில் அவைகள் கிடைத்தன.சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்க தங்க மண் கூடை தங்க மண்சட்டி ஆகியவைகளும் உள்ளது.அறுபது கிராமங்கள் அக்கோயிலுக்காக நிமந்தமாக உள்ளது.ஐம்பது ஆண்டுகள் ஓடாத தேரை மீண்டும் புதிப்பித்த சிறப்பு நமது சிரவை ஆதீனம் மூன்றாம் குரு மஹா சந்நிதானம் கஜ பூஜை சுந்தர சுவாமிகளுக்கு உண்டு.அத்தேரை அக்காலத்தில் பிரித்து வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சிகள் நடந்துள்ளது.பின் மக்களால் தடுக்கப்பட்டு பரமரிப்பு இன்றி இருந்தது.நூறாண்டுகள் திருப்பணிகள் இன்றி
இக்கோயில் இருந்தது நமது சிரவை ஆதீனம் மூன்றாம் குரு மஹா சந்நிதானம் கஜ பூஜை சுந்தர சுவாமிகள் முயற்சியில் இத்திருப்பணி நடந்தது. இன்னும் இப்பகுதியில் கோயில் கட்டுகின்றவர்கள் தங்களது ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் பொழுது இக்கோயில் கட்டுமாணத்தை தவிர்த்து பணிசெய்து கொடுப்பேன் என ஒப்பந்தம் செய்வார்கள்.அவ்வகையில் மிக உன்னதாமான கலைக்கோயில் ஆவுடையார் கோயில் திருப்பணி. இவ்விதம் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் தனது அனுபவத்தைப்
பகிர்ந்து கொண்டார்கள்.
இந்த தகவல்களை அருளிய சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களுக்கு நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் நன்றிகளைத் தெரிவித்து வணங்கி மகிழ்கின்றார்கள்.
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக