- கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறைகளை ஜீவ நாடியில் கேட்டு அதைக் கடைபிடிக்கும் முறைகளை நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் உரைத்திருந்தார்.
- அதை நமது கௌமரா பயண வாசகர்களுக்காக ஒரு பதிவை வெளியிட்டு இருந்தோம்.
- அதேபோல் சுமார் 30க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் அந்தியூர் ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் ஐப்பசி அமாவாஸை அன்று முறைகளை நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் மூலம் காப்புக் கட்டி முறையாக ஜீவ நாடியில் முருகப்பெருமான் உரைத்தது போலவே விரதம் இருந்து வந்தார்கள்.
- அந்த வகையில் கடந்த 17.11.2015 செவ்வாய்க்கிழமை கந்த சஷ்டி அன்று அந்தியூர் ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் தலமையில் கணபதி வேள்வி, முருகன் வேள்வி வாராஹி வேள்வி அகியவை சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து நடத்தப்பட்டது.
- அதன் பின்பு சூரன் வதம், திருக்கல்யாணம் என கந்த சஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகளின் போது பல பக்தர்கள் தங்களது அலைபேசிகளில் படம் பிடித்தார்கள்.
- 18 அடி வேலுக்கும் சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது.
- முறையாக விரதம், பூஜைகள் செய்தால் யாம் காட்சி கொடுப்போம் என முருகன் ஏற்கனவே ஜீவ நாடியில் உரைத்து இருந்தார். அந்த வகையில் பக்தர்கள் தங்களது அலைபேசியில் எடுத்திருந்த படங்களைப் பார்த்தபோது இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதை கௌமார பயண வாசகர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக இங்கு வெளியிடுகின்றோம்.
- வேள்வியில் மயில் ஒன்று பறந்து வந்து அமரும் காட்சி (வேள்வி செய்பவர் நமது குரு நாதர் அவர்கள்)
- வேள்வியில் மயில் வந்து அமர்ந்துவிட்ட காட்சி
- வேள்வியில் சேவல் ஒன்று வந்து அமர்ந்து ஆகுதியை உண்ணும் காட்சி
- வேள்வியில் அழகிய தாமரை மொட்டு தோன்றிய காட்சி
- ஜீவ நாடியில் உரைத்தபடியே முருகப் பெருமான் வேள்வியில் சேவல், மயில், தாமரை ஆகிய உருவங்களோடு காட்சி கொடுத்து விட்டார். அது போல் முருகப் பெருமான் ஜீவ நாடி மூலம் தினசரி ஏராளமான் அதிசயங்கள் நடந்து வருகின்றன.
- நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களைத் தரிசனம் செய்து அவர் கையில் விபூதி பெற்ற பலருக்கு இது போல் பல அதிசயங்கள் நடந்து தங்கள் வாழ்வே மாறி வருவதை நான் பார்த்து வருகிறேன்.
- அது போல் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களிடம் ஜீவ நாடி கேட்டவர்களும் சரி, அமாவாஸை அருள்வாக்கு கேட்டவர்களும் சரி அவர் மீது முருகப் பெருமான் வந்துதான் வாக்கு உரைக்கின்றார் என்பதை 100% உணர்ந்து கொள்கின்றார்கள்.
- உணராத வரை ஒரு சாதாரண நாடி ஜோதிடராகவோ அல்லது ஒரு உபாசகராகவோதான் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் தெரிவார்கள். உணர்ந்தவர்களுக்கு சென்ற ஜென்மத்தில் கௌமார நெறியில் வந்த அடியவர் என்பதும் முருகன் இவர் மூலம் நடத்தி வருகின்ற திருவிளையாடல்கள் என்பதும் தெரியும். இந்த விஷயங்கள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே மீனாட்சி நாடியில் எழுதப்பட்டுள்ளதும் இப்போது நடக்கும் நிகழ்ச்சிகள் அதை மெய்ப்பிப்பதும் கண்கூடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக