சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் அவர்கள் கார்த்திகை தீபத் திருநாளான இன்று அவர் திருவாய் மலர்ந்தருளிய உபதேச மொழிகள் கௌமாரப்பயண வாசகர்களுக்காக,
சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் அவர்கள்.
1.பெருஞ்சுடரான அண்ணாமலை தீபமே நம் வீட்டு சிறு அகல்களில் குட்டிக் குழந்தையாக(முருகனாக) ஔிவீசுகிறது.கார்த்திகை தீபம் ஏற்றும்போது ஆறுதீபங்கனை வீட்டுவாசலில் ஏற்றி வைக்கவேண்டும்.
2.நன்றி மறப்பது நன்றன்று வள்ளுவர் வாக்கு. முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் திருககார்த்திகை நாள்.
3.திருவிளக்கு ஆயிரம் என்னும் 1000 பாடல்கள் எழுதியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.
4.இறையனுபூதி பெறாத ஒருவர், சாஸ்த்திரங்களை ஏராளமாக படித்தவரா இருக்கலாம். ஆனால்,அவர் ஞானிகள் சொல்லும் அதே மந்திரங்களை உபதேசம் செய்தாலும் அதற்குரிய உயர்ந்த பலன் இருக்காது. தகுதியானவர்கள் உபதேசம் செய்தால் தான் மந்திரம் பலிக்கும்.
என்றென்றும்,
குருவின் சேவையில்,
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக