- மீடியமாக பல இரகசியங்களை அறிந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் நலம் புரிந்துள்ளார்கள்.
- மீடியம் ஆராய்ச்சியில் உன்னதம் எனக் குறிக்கப்படும் இன்னொரு செயல் கோவையில் 18 ஆண்டுகளாகக் காணாமல் போன சிறுவனை குறிப்பிட்ட மாதத்திற்குள் வீடு தேடி ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் வர வைத்துள்ளார்கள்.
- மீடியம் ஆராய்ச்சியின் அனுபவங்களை ஜோதிடத்தோடு இணைத்து ஆய்வு செய்து ஜோதிட உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்த புண்ணியச் சக்கரம் எனும் ஆய்வைக் கண்டுபிடித்து அதை ஒரு நூலாகவே எழுதி ஜோதிட உலகிற்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் பெரிய சேவை செய்துள்ளார்கள்.
- 2007ம் ஆண்டோடு பத்திரிகைத் தொழிலை விட்டு கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றச் சென்றார்கள்.
- மீண்டும் சென்னை அப்ஸரா பப்ளிகேசன்ஸ் ஆசிரியர் சித்தர் அடிமை ஸ்ரீசி.ராஜீ ஐயா அவர்களின் நட்பால் குருவருள் ஜோதிடம் மற்றும் திருவருள் சக்தி இதழ்களில் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளை ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் எழுதினார்கள்.
- திருவருள் சக்தி எனும் ஆன்மீக மாத இதழில் எத்திக்கும் அருள் பரப்பும் தித்திக்கும் திருப்புகழ் எனும் அருணகிரி நாத சுவாமிகளின் திருவரலாற்றையும் திருப்புகழ் பாடல்களின் பெருமையையும் சுவைபட மிகவும் எளிய நடையில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் எழுதி வந்தார்கள். சுமார் எட்டு மாதங்களாக அந்த தொடர் வெளிவந்தது.
- திருப்புகழ் தொடரில் தனது பெயரின் முன்பு ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் என்று குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தும் முருகன் பற்றிய தகவல்களின் சிறப்பைப் பார்த்தும் சேலத்தில் இருந்து ராஜா எனும் வாசகர் ஒருவர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களைத் தொடர்பு கொண்டு திருவண்ணாமலை மீனாட்சி நாடியில் வந்துள்ள சத்ரு சம்ஹார யந்திரத்தின் பூஜை முறைகள் குறித்துக் கேட்டார். ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் உரிய விளக்கம் கூறினார்.அப்போதே மீனாட்சி நாடி மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பும் ஈடுபாடும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு ஏற்பட்டது.
- டாக்டர்.W.ஜோதி அக்பர் சுவாமிகள் எனும் இசுலாமியர் மீனாட்சி நாடி படிப்பதையும் அவர் சிறந்த முருக பக்தராக இருந்து வருவதையும் கேள்வியுற்ற ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் அப்போதே திருவண்ணாமலை சென்று ஜோதி அக்பர் சுவாமிகள் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்கள்.
- ஜோதி அக்பர் சுவாமிகள் அவர்களுடன் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களை சேலம் ராஜா என்பவர் அறிமுகம் செய்து வைத்தார். மீனாட்சி நாடி சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
- முதன் முதலாக ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு மீனாட்சி நாடி உரைக்கும்போதே தாம் சிறு வயது முதலாக நடந்த அனைத்து நிகழ்ச்சிகளும் எழுதப்பட்டிருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள்.
- முதல் உபதேச குரு தவத்திரு வேலுச்சாமி அடிகளார் பற்றியும், ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் சொல்லி வரும் அருள்வாக்கு மற்றும் ஜீவ நாடி பற்றியும்,கல்லூரிப்பணி,புத்தகம் எழுதுதல், ஆன்மீகப் பணி,குடும்பம்,மனைவி,குழந்தை பற்றியும்,கௌமார சமயம் பற்றியும் சிறப்பாக மீனாட்சி நாடியில் எழுதப்பட்டிருந்தது.
- தாமே அருள்வாக்கு சொல்லியும் ஜீவ நாடி படித்து வந்தாலும் மீனாட்சி நாடியில் வந்தபடி ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் அனைத்தையும் தவறாமல் கடைபிடித்து வந்தார்கள். அதேபோல் ஜோதி அக்பர் சுவாமிகள் அவர்களுடன் நல்ல நட்புடன் இருந்து அவரையும் ஒரு குருவாகவே கருதி வந்தார்கள்.
குரா மரம்
- மீனாட்சி நாடி உரைத்தபடி திருவிடைக்கழி எனும் முருகன் கோவில் செல்லும் போது ஜோதி அக்பர் சுவாமிகள் போலவே குராமரத்தின் கீழ் ஒருவர் தோன்றி ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு ஒரு உபதேசம் செய்துவிட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து மறைந்துவிட்டார். அதை உடன் சென்ற முத்துசாமி என்பவரும் கண்டு ஆச்சரியம் அடைந்து ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் மீதும் தன் மீதும் முருகன் காட்டிய கருணையை எண்னி சந்தோஷம் அடைந்தார்கள்.
திருவிடைக்கழி முருகன்
தொடரும்....
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
i remember, this is the first reading for you .i had never forget this moment in my life.This reading got turning point for both us.after visiting this temple continuous for three times . all grace go to shri nanaskanda murthi only.
பதிலளிநீக்குஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
can you share contact number for ஜோதி அக்பர் சுவாமிகள் please i am searching his contact for long time but couldnt able to get it.
பதிலளிநீக்குமுகவரியைப் பகிரவும்
பதிலளிநீக்கு