மாங்கல்யம்
- முருகப்பெருமான் ஜீவ நாடி உரைப்பதை நிறுத்தக்கூடாது என்றும் தெய்வ இரகசியங்களை இனிமேல் உரைக்கக்கூடாது என்றும் ஜீவ நாடியிலேயே ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு வாக்குரைத்தார். அதன் பின்பு சிறுக சிறுக மீண்டும் ஜீவ நாடியை மக்களுக்கு அருள்வாக்காக உரைக்கத் தொடங்கினார்கள் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்.
- ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் உறவினர் ஒருவருக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க ஜீவ நாடி உரைத்து அது அப்படியே 100% பலித்ததை அறிந்த இன்னொருவர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களிடம் தனது தோட்டத்தில் ஆழ்துளைக்கிணறு அமைக்க வேண்டி ஜீவ நாடி கேட்க வந்தார். ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் உங்களது தோட்டத்திற்கு வருணசாபம் உண்டு என்றும் அங்கு ஆழ்துளைக்கிணறு அமைக்க வாய்ப்பில்லை என்றும் அப்படியே முயற்சித்தாலும் தண்ணீர் கிடைக்காது என்றும் ஜீவ நாடியில் முருகன் உரைத்ததை ஒளிவு மறைவில்லாமல் உரைத்தார்கள். ஆனாலும் ஒரு முயற்சி எடுத்துப் பார்க்கின்றேன் என்று கூறி தனது தோட்டத்தில் எட்டு இடங்களில் போர் போட்டும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்பதே ஆச்சரியமான செய்தி. இந்த தகவலும் நீண்ட நாட்கள் அனைவராலும் பேசப்பட்டது.
- ஒருவர் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் அதற்கு தங்கள் ஆசி வேண்டும் என்று ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களைப் பணிந்தார். ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் முருகனை வணங்கி ஜீவ நாடியைப் பார்த்தார்கள். ஓலைச்சுவடியில் இரண்டு மாங்கல்யங்கள் காட்சி கொடுத்தன. இதைக் கண்டு அதிர்ந்த ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் இறை இரகசியத்தை அறிவிக்கக்கூடாது எனும் முருகனின் கட்டளையால் ஜாதகத்தில் 8மிடத்தில் கேது இருப்பதால் மாங்கல்ய தோஷம் இருக்கிறது என்று மட்டும் உரைத்து அதற்கு என சில பரிகாரங்களை உரைத்து அனுப்பி வைத்தார்கள். ஜீவ நாடியில் வந்தது போலவே அந்த பெண்ணின் கழுத்தில் ஒருவன் கட்டாயத் தாலி கட்டிவிட காவல் நிலையத்தில் அந்த பெண்ணின் தந்தை அந்த கயிற்றை அறுக்க, மீண்டும் அந்த பெண்ணிற்கு மணவாழ்க்கை அமைந்து ஜீவ நாடியில் வந்தது போலவே இரு மாங்கல்யம் அமைந்துவிட்டது அதிசயமாக இருந்தது எனலாம்.
- இப்படி படிக்கும் காலங்களில் விடுப்பு கிடைக்கும்போதெல்லாம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் பூஜை செய்வதும், தனது குரு தவத்திரு.வேலுச்சாமி அடிகளார் அவர்களைச் சந்திப்பதும், ஆன்மீக ஈடுபாடு கொள்வதும், நூல்களைப் படிப்பதும் என தனது வாழ்வை இறையருளோடு அமைத்துக் கொண்டார்கள். எனவே மக்கள் அனைவரும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களை சுவாமி என்றே அழைத்து மகிழ்ந்தார்கள். வயதில் சிறியனவாக இருந்தாலும் பெரிய பெரிய மனிதர்களெல்லாம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களிடம் ஆலோசனை கேட்டு அது அப்படியே 100% தங்கள் வாழ்வில் நடப்பது கண்டு பெரும்பாலோர் முருக பக்தர்களாக மாறினார்கள் எனலாம்.
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக