திங்கள், 15 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-32


பக்தர்கள் வேண்டுபவருக்கு வேண்டும் வரங்களை அளிப்பவனும் கேட்பவருக்கு கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணியும் முருகா நீதான் என்று ஆராய்ந்து பார்த்தால் கைகூடாதது எது உண்டு? எல்லாமே கை கூடும் என்கின்றார் அருணகிரிநாத சுவாமிகள்.
                                     
இந்த எண்ணத்துடன் அவ்வாறு துதித்தால் எந்தக் காரியம்தான் நிறைவேறாது? நிச்சயம் நிறைவேறும். பாதரசம் போன்றவைகளை வைத்துச் செய்யும் ரசவாத வித்தை மூலம் பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தகரம், துத்தநாகம், வெண்கலம் ஆகிய ஒன்பது உலோகங்களை இட்ட கூட்டுறவால் இறுதியில் கரியாகும். இதனால் வேறு பயன் ஏது? பக்தியோடு வழிபாடு செய்வதை விடுத்து மாய வித்தைகளால் பயன் ஏதும் இல்லை என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள்.
                                               
சத்தியமான சொரூபனே, வேதம் ஓதும் பிரமனும் திருமாலும் எல்லா வேத ஆகம நூல்களும் அறியாத பரதேவதையாகிய பார்வதி தந்தருளிய குழந்தையே,  பழனியில் வாழ்கின்ற பெருமாளே. என்று இந்த திருப்புகழில் பாடி இருக்கின்றார்.
                                               
எடுக்கின்ற காரியங்கள் அனைத்தும் தடை ஆகின்றது என்று புலம்புபவர்கள். கிரக்ங்களின் கெடுபலன்களில் சிக்கியிருப்பவர்கள், மாயையின் வசத்தால் சிக்கி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பவர்கள் ஆகிய அனைவரும் பக்தியோடு பழனி மலை சென்று முருகனை வணங்கி இந்தத் திருப்புகழைப் பாடினால் உங்கள் துன்பங்களுக்கெல்லாம் நிச்சயம் விடை கிட்டும் என்பது திண்ணம். இதோ அந்த திருப்புகழ்.
பழநி திருப்புகழ்
வரதா மணிநீ  யெனவோரில்
     வருகா தெதுதா னதில்வாரா
திரதா திகளால் நவலோக
     மிடவே கரியா மிதிலேது
சரதா மறையோ  தயன்மாலும்
     சகலா கமநூ லறியாத
பரதே வதையாள் தருசேயே
     பழனா புரிவாழ் பெருமாளே!
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                                 
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம்,அந்தியூர்.
                                              ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                                                        சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக