- ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் பாட்டி பூஜிக்கும் பண்ணாரி அம்மன் சிலையை ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களும் அவர்களின் தம்பியும் ஆர்வமுடன் தாங்களும் பூஜிக்கத் தொடங்கினார்கள்.
- அந்த சிலையை ஒரு சிறு தேர் போல் கட்டி ஊர்வலம் கொண்டு செல்தல், பூக்கட்டிப் போடுதல், ஊதுபத்தி, சூடம் காட்டி பூஜித்தல் என சிறுவர்கள் இருவருமே மிகுந்த ஆர்வத்தோடு பண்ணாரி அம்மனைப் பூஜித்தனர்
.
- பூஜிக்க பூஜிக்க இரண்டு சிறுவர்களுக்குமே பண்ணாரி செல்ல வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. திருமதி.குருவாயம்மாள் அவர்கள் இருவரையும் பண்ணாரி கூட்டிச் சென்றார்கள். பூஜை மணி ஒன்றையும் இன்னும் சில மண் சிலைகளையும் வாங்கிக் கொடுத்தார்கள்.
- இப்படி இன்றும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் வீட்டில் பண்ணாரி மாரியம்மன் அருள் பாலித்து வருகின்றார்.
- சிறு வயது முதலாகவே பூஜை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு தனது பாட்டி திருமதி.குருவாயம்மாள் அவர்கள் மூலம் வந்தது
- அடிக்கடி தான் கண்ட தெய்வீகக் காட்சிகளையும் கனவுகளையும் திருமதி.குருவாயம்மாள் அவர்கள் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களிடம் உரைப்பார்கள். அவர் கண்ட கனவு போலவே எதிர்கால நிகழ்ச்சிகள் நடப்பது கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைவர். அத்தகய ஒரு தெய்வீக சக்தியை திருமதி.குருவாயம்மாள் அவர்கள் பெற்றிருந்தார்கள்.
- திருமதி.குருவாயம்மாள் அவர்களுக்கு சில வருடங்கள் கழித்து மீண்டும் அந்த குதிகால் வலி வர ஆரம்பித்தது. மருத்துவர்கள் எலும்பு வளர்வதாகவும் மறுபடியும் அறுவை சிகிச்சைதான் அதற்கு தீர்வு எனவும் உரைத்தனர்.
- திருமதி.குருவாயம்மாள் அவர்களுக்கு இந்த முறை மருத்துவத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை. இறைவனே தனது கால் வலியைக் குணமாக்குவார் என்று தீவிரமாக பண்ணாரி அம்மனைப் பிரார்த்தனை செய்து வந்தார். தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக