ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு பகுதி-6
·
- ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் பாட்டிக்கு தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் அருள் வாக்கு உரைக்கும் போது உங்கள்
தோட்டத்திலேயே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முருகப்பெருமான் காலடி பட்டுள்ளது
என்றும் ஒரு தீபம் மட்டும் ஏற்றி தோட்டத்தில் வழிபட அந்த சக்தியை உணரலாம் என்றும்
அதை உணரும் சக்தி ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களிடம் உள்ளது என்றும் தவத்திரு வேலுச்சாமி அடிகளார்
அவர்கள் உரைத்தார்கள்.
- ·
அதேபோல்
ஜோதிடர்கள் பலர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் வீடு தேடி வந்து குடும்ப ஜாதகங்களைப் பார்த்து
இந்த பூமியில் ஒரு தெய்வம் குடி கொண்டுள்ளது. அதற்கு என ஒரு பிள்ளை பிறந்துள்ளது.
அதன் மூலம் அந்த தெய்வீக சக்தி வெளிப்படும் என்றும் அனைத்து ஜோதிடர்களுமே ஒரே மாதிரி
உரைத்து வந்தனர்.
- ·
ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் பாட்டியும் சில மாதங்கள் தீபம் ஏற்றி வழிபட
தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகில் சுயம்பாக ஒரு லிங்க வடிவில் அழகான ஒரு சிலை இருந்து
அதை எடுத்து ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் அதை பிரதிஷ்டை செய்து ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி எனப்
பெயர் வைத்து தனது 13 வயதில் பூஜிக்கத் தொடங்கினார்கள்.ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் தம்பி திரு சுப்பிரமணியம் அவர்களும் பூஜைக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
- தவத்திரு. வேலுச்சாமி அடிகளார் அவர்கள் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு முருகனின் மூல மந்திரத்தை உபதேசம் செய்து ருத்திராட்சம் போடும் முறைகளையும் தினசரி செய்யும் அனுஷ்டானங்களையும் முருகனின் பூஜை முறைகளையும் உபதேசம் செய்தார்கள்.
- · தவத்திரு. வேலுச்சாமி அடிகளார் அவர்களின் உபதேசத்தை சிறிதளவு கூட பிசகாமல் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் கடைபிடித்து அவர் உபதேசம் செய்த மந்திரத்தை ஒரு நாள் கூடத் தவறாமல் நியமம் மாறாமல் ஜபம் செய்து வந்தார்கள். அதேபோல் நியமப்படி ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தியைப்
பூஜிக்க பூஜிக்க தனக்கு உபதேசம் செய்த தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்களின்
குரல் கூட மாறாமல் அப்படியே ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு அருள்வாக்காக சித்தியானது.தனது குரு போலவே ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களும் பாடல் வடிவில் அருள்வாக்கு உரைக்கும் வல்லமையை முருகப்பெருமான் அருளால் பெற்றார்கள்.
- ·
இதை ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின்
பாட்டி தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்களிடம் தெரிவிக்க அடிகளாரும் உனது கால்
வலியை நீக்கும் பிரார்த்தனையை ஸ்ரீஸ்கந்த உபாசகர் அருள் வாக்கு சொல்லும் போது முன்வை என்று உரைத்தார்கள்.
- · ஒரு நாள் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியைப் பூஜித்து ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் அருள்வாக்கு மேடையில் அமர்ந்தார்கள். அப்போது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் பாட்டி எனது கால் வலியை நீக்கு என்று அருள்வாக்கு நேரத்தில் கேட்க அருள்வாக்கில் நடையோடும்... நடை
போடும்...வண்டி மெல்ல மெல்ல ஓடும்...என்று பாடல் வடிவில் தனது பாட்டிக்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர் அருள்
வாக்கு உரைத்தார்கள்.
- ·
இதையும்
தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்களிடம் பாட்டி தெரிவிக்க முருகன் அங்கே
எழுந்தருளிவிட்டார் இனிமேல் நீ இங்கு நடந்து வந்து சிரமப் பட வேண்டாம் அங்கேயே ஸ்ரீஸ்கந்த உபாசகர் மூலம் ஏராளமான சித்தாடல்களை முருகப்பெருமான் நடத்துவார்
என்று உரைத்தார்கள்.
- ·
அதன்பின்பு
ஸ்ரீஸ்கந்த உபாசகர்
அவர்களுக்கு அமாவாஸை அன்று மட்டும் பூஜை செய்து அருள் வாக்கு சொல்லுமாறு உபதேசம்
செய்தார்கள் தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள்.
- ·
அன்று முதல்
அமாவாஸை தோறும் பொங்கலிட்டு படையல் வைத்து பூஜை செய்து அருள்வாக்கு சொல்ல
ஆரம்பித்தார் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்.
- ·
அமாவாஸை
பூஜை நடக்கும் போது கழுத்தில் வெள்ளை நிறமுடைய கருடன் வந்து மூன்று முறை
வட்டமிடுவதை அனைவரும் கண்டு ஆச்சரியப்பட்டனர்.இது போல் அடிக்கடி நடந்து வந்தது.
- ·
தனது குரு
நாதர் மாதிரியே தைப்பூசத்தின் மீது அதீத ஈர்ப்பு ஏற்பட்ட ஸ்ரீஸ்கந்த
உபாசகர் அவர்கள் தைப்பூசத்தை
முறையாக் மார்கழி 1ம் தேதி முதல் தைப்பூசம் வரை விரதம் இருந்து தை அமாவாஸையில் சேவல் கொடி ஏற்றி தைப்பூசத்திற்கு முந்தைய நாள் தீர்த்த உற்சவம் எடுத்து தைப்பூசத்தன்று
மூன்று கால பூஜையைச் செய்து வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் அளித்து அருள்வாக்கு
கூறி தனது விரதத்தை முடிப்பார்கள். ஆரம்ப காலத்தில் ஏழு பேர் பூஜைக்கு வருவதே
பெரிய விஷயம். தனது பாட்டியை முன்னிலைப்படுத்தி முதல் விபூதியை அளித்து பூஜையை
முடிப்பார்கள். ஆனால் இப்போது சுமார் ஆயிரம் நபர்கள் வந்து தைப்பூசத்தைத் தரிசனம்
செய்கின்றார்கள். இன்றும் இதே பூஜைகள்தான் நடக்கின்றன. தொடரும்.....
The above article said it's clear truth. Because I know 13 years of the shri Skanda murthi upaskar.all these had done for God's blessed.
பதிலளிநீக்கு