புதன், 17 பிப்ரவரி, 2016

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு பகுதி-13

         
  • ஒரு பெண்ணிற்கு ஜீவ நாடி உரைக்கும் போது கேது எனும் கிரகம் துன்புறுத்தும் என்றும் கேதுவிற்கு சாந்தி செய்யும் சக்தி விநாயகப்பெருமானிடம் உண்டு என்றும் உனது தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே ஒரு மண் வினாயகர் வைத்து தினமும் வழிபாடு நடத்தி பின்பு அந்த வினாயகரை ஒரு குறிப்பிட்ட நாள் கழித்து ஆற்றில் கரைத்துவிடும்படி ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் ஜீவ நாடியில் வந்த்த்தை உரைத்தார்கள்.
  •          ஆனால் அந்த பெண்ணோ அப்படி ஏதும் செய்யாமல் அலட்சியமாக சில நாட்கள் விட்டு விட்டு தனது வேலையைப் பார்க்கத் தொடங்கினார். அந்த பெண் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மாடு மேய்க்க அருகில் உள்ள கானகத்திற்குச் சென்று மாடுகளை மேய்க்க விட்டு விட்டு ஒரு புளிய மரத்தின் அடியில் அமர்ந்து மாடுகள் மேய்வதைப் பார்த்து வந்தார். திடீரெனெ திரும்பிப் பார்க்க ஒரு பெரிய யானை ஒன்று அந்தப் பெண்மணியிடம் வந்து நின்றது. அந்தப் பெண்மணி நிலை தடுமாறி எழுவதற்குள் அந்த யானை அந்த அம்மையை துதிக்கையால் தூக்கிப் போட்டது. பின்பு வேகமாக மிதிக்க வந்தது. எதோ ஒரு நல்ல நேரம் போலும் ஞானஸ்கந்தா...முருகா..என அந்த பெண்மணி இறை நாமங்களைச் சொல்ல சினிமாவில் காண்பதுபோலவே மிதிக்க வந்த காலை பின்னுக்கு இழுத்து அந்த யானை பிளிறிக்கொண்டு ஓடி விட்டது. துதிக்கையால் தூக்கி எறியப்பட்டதால் தண்டுவடத்தில் பெரிய அடி ஏற்பட்டு நீண்ட காலம் சிகிச்சை எடுத்து தற்போது வரை அந்த பெண்மணி நன்றாக வாழ்ந்து வருகின்றார். சம்பவம் நடந்த பின்பு ஸ்ரீஸ்கந்த உபாசகரைத் தேடி ஒரு பெரிய கூட்டமே வந்து சரணடைந்து முருகப்பெருமானின் பக்தர்களாகச் சேர்ந்தது. ஞானஸ்கந்தனை வணங்கி விபூதி கொடுத்தி ஆசி கூறி பின் அந்த பெண் பழைய சுய உணர்வை அடைந்த சம்பவம் பல ஆண்டுகள் பேசப்பட்டன். அவ்வளவு வலிமை உடையது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி.
                                        
  •          அடுத்து ஒரு பெண்ணிற்கு தீராத இடுப்பு வலி இருந்து வந்தது. அந்த பெண்மணிக்கும் இந்த மண் வினாயகர் வழிபாடே வந்தது. அந்த பெண் செய்ய வில்லை ஆனாலும் அந்த பெண்ணின் மகன் அந்த பூஜையைச் செய்து மருத்துவத்தால் தீராத வலி முருகன் அருளாலும் ஸ்ரீஸ்கந்த உபாசகரின் ஆசியாலும் தீர்ந்தது.
  •          அடுத்து ஒரு குடும்பம் வந்து ஸ்ரீஸ்கந்த உபாசகரைச் சந்தித்தது.அவர்களுக்கு ஜீவ நாடியில் ராகு எனும் அரவத்தால் பாதிப்பு வரும் என்றும், இரவில் எங்கும் அலைய வேண்டாம் என்றும், உங்கள் தோட்டத்தில் கருப்பசாமி கோவில் உண்டு அதை தினமும் தீபம் ஏற்றி வழிபடுங்கள் என்றும் வந்ததை ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் உரைத்தார்கள். அவர்கள் ஐநூறு ரூபாய் தட்சிணை வைத்து வணங்கி ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம் ஆசி கேட்கும் போது அவர் உறவினர் ஒருவர் தடுத்து தட்சிணை வேண்டாம் என்றும் ஆசி வாங்காமலேயே அழைத்துச் சென்றார்கள்.
  •          ஸ்ரீஸ்கந்த உபாசகர் பண ஆசை உடையவராக இருந்தால் இவ்வளவு சக்தியை வைத்துக்கொண்டு பெரிய கோடீஸ்வரனாக வாழ்வை அமைத்திருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனாலும் ஏன் இப்படி ஆனது என ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் ஜீவ நாடியை நோக்க ஒரு பெரிய சர்ப்பமும், நீல நிறமும், ஒரு பெரிய பணக்கட்டும் படம்போல ஜீவ நாடியில் தோன்றுவதைக் கண்டு ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் திடுக்கிட்டார்கள்.
                                                                                                          
  •   சில மாதங்கள் கழித்து நாடியில் ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம் முருகப்பெருமான் காட்டிய காட்சி போலவே ஒரு பெரிய கரு நாகம் அவரைக் கடித்து உடல் முழுதும் நீல நிறமாக மாறி உயிருக்குப் போராடும் நிலையில் ஐந்து லட்சம் செலவு செய்தும் பலனில்லாமல் மன்னிப்புக் கேட்டு அழுது ஸ்ரீஸ்கந்த உபாசகர் கை விபூதியைப் பெற்றுச் சென்ற பின்னர் அவர் உயிர் பிழைத்து எழுந்தது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதன் பின்னர் இன்றுவரை அவர்கள் ஸ்ரீஞானஸ்கதாஸ்ரமத்தின் பக்தர்களாக இருப்பதும் தெளிவு.   தொடரும்...

                   ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக