புதன், 17 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-34

 இந்தப் பூலோகத்தின் தன்னிகரிலாத ஒப்பற்ற தலைவரும், புகலி எனும் பெயருடைய சீர்காழிப்பதியில் அவதரித்தவருமான
                            
திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத் தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு இந்த அடிமையாகிய எனக்கு திருவருள் புரிவாயாக என்று அருணகிரிநாத சுவாமிகள் இந்தத் திருப்புகழில் முருகப்பெருமானிடம் வேண்டுகின்றார்.
                               
 யுத்த கலத்தில் போர் செய்யும் போது எதிர்த்து வந்த சூரன் மாண்டொழிய ஒப்புவமை இல்லாத வேலாயுதத்தை ஏவி அருளியவனே,
                                                    
  நமசிவய என்ற ஐந்தெழுத்தின் தத்துவமாகியும் அதன் பொருளாகவும் இருப்பவனே கயிலைமலை மலையாகிய வெள்ளியங்கிரியில் உள்ள பெருமாளே. என்று பாடுகின்றார் கௌமார குருநாதர் அருணகிரிநாத சுவாமிகள்.
கயிலைத் திருப்புகழ்
புமியதனிற்  ப்ரபுவான
     புகலியில்வித் தகர்போல
அமிர்தகவித்  தொடைபாட
     அடிமைதனக்  கருள்வாயே
சமரிலெதிர்த்  தசுர்மாளத்
     தனியயில்விட்  டருள்வோனே
நமசிவயப்   பொருளானே
     ரஜதகிரிப்  பெருமாளே.

கல்வியறிவு வேண்டும் என்பவர்கள், தேர்வு எழுதுபவர்கள், நன்றாகப்படிக்க வேண்டும் என நினைக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள், படிப்பே வரவில்லை என்று புலம்புவர்கள் இந்த திருப்புகழை அடிக்கடி ஓதி வந்தால் கல்வியில் மேன்மையடைவதை அனுபவத்தில் காணலாம்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
         சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக