ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு பகுதி-5

·         
                                      
  •     அந்த வாரம் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவ்ர்கள் தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தார். மிக அருமையான விளக்கங்களை வருகின்ற பக்தர்களுக்கு கூறிக் கொண்டிருந்தார். அதை கவனித்துக் கொண்டே வந்த தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களிடம் உனது பேனா தொலைந்து போனதே கிடைத்து விட்டதா? எனக் கேட்டார். ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கு தூக்கி வாரிப் போட்டது. இல்லை சுவாமி என்றார். சரி முருகன் தருவார் என்று உரைத்தார்.
  • ·         மீண்டும் திங்கட்கிழமை தனது பள்ளி செல்லும் வழியில் 5 ரூபாய் நோட்டு ஒன்று கீழே கிடந்தது. ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் அதை எடுத்து எல்லோரிடமும் அது உங்களுடையதா என்க் கேட்க அனைவரும் இல்லை என்றனர். ஒரு வேளை முருகன்தான் பேனா வாங்கும் பணத்தை இந்த விளையாட்டு மூலம் தந்துள்ளாரோ என்று எண்ணி அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு தனது பாட்டியிடம் நடந்ததைக் கூறினார்.
  • ·         ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் பாட்டி 10 ரூபாய் தந்து ஒரு புதுப் பேனா வாங்கிக்கொள்ளும்படியும் இந்த 5 ரூபாயை வெள்ளிக்கிழமை பூஜைக்கு பூ வாங்கித் தரும்படியும் சொல்ல ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் அவ்விதமே செய்தார்.
  • ·         இன்னும் ஒரு நாள் தனது தோட்டத்தில் உள்ள எலுமிச்சைச் செடியில் வெள்ளிக்கிழமை பூஜைக்காக ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் எலுமிச்சை பழங்களைப் பறிக்கும் போது ஒரு முள் ஏறி விட்டது. அப்போது பெரிய வ்லி இல்லை. வழக்கம்போல் தவத்திரு வேலுச்சாமி அடிகளார்  நடத்தி வரும் வெள்ளிக்கிழமை பூஜைக்கு சென்றார். வலி அதிகமாக இருக்கவே விளக்கம் சொல்லும் பணியில் வேறு ஒருவரை அமர்த்தி விட்டு இவர் ஒரு இடத்தில் படுத்து விட்டார். விடியற்காலை 3 மணி ஆனதால் கண் அயர்ந்து விட்டார். தவத்திரு வேலுச்சாமி அடிகளார் விளக்கிச் சொல்லும் நபர் மாறியதைக் கண்டு ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களை அழைத்து வருமாறு சொல்ல ஸ்ரீஸ்கந்த உபாசகர் மீண்டும் விளக்கம் சொல்ல அமர்ந்தார். அப்போது ஏறிய முள் இன்னுமா வலிக்கிறது சரியாகிவிடும் பணியைப் பார் என ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம் தவத்திரு வேலுச்சாமி அடிகளார் உரைக்க ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கு வலியும் போனது முருகன் விளையாட்டும் புரிய ஆரம்பித்தது.
                                                 
  • ·         இன்னும் ஒரு முறை ஒரு பக்தர் செய்த தவறுக்கு தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் தனது கையில் உள்ள 5 மூங்கில் பிரம்புகள் மூலம் தன்னை அடிக்கத்தொடங்கியவுடன் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் தனது கையைக் குறுக்கே வைத்து அத்தனை அடிகளையும் தன் கையில் வாங்கிக் கொண்டு தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் மீது அடி விழாதபடி தடுத்தார். தன் மீது அடி விழாதது ஏன் என அடிகளார் பார்க்க அத்தனை அடிகளையும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் வாங்கிக் கொள்வதையும் அதீத குரு பக்தியில் இருப்பதையும் அறிந்து அன்பில் அடிகளார் திளைத்தார்கள்.
                      ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

1 கருத்து: