- அடுத்து வாக்கிற்கு உரிய அம்மன் தெய்வம் இருக்கின்ற ஆலயத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் அடியார்கள் சூழ வழிபாடு செய்தார்கள். சிறிது நேரத்தில் பன்றி முகம் போலவே முகம் கொண்ட ஒரு பெண்மணி வந்து நின்றிருப்பதைக் கண்ணுற்ற அடியவர் ஒருவர் ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம் வாராஹி அம்மனைப் பாருங்கள் எனச் சொல்ல ஸ்ரீஸ்கந்த உபாசகரும் வாராஹி போலவே முகம் இருந்த அந்தப் பெண்மணியைப் பார்த்து வணங்கி ஆனந்தம் அடைந்தார்கள். அந்த பெண்மணியும் ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம் இது வாக்கு விடும் தெய்வம்....பேசாதவர்களைக்கூட பேச வைக்கும் தெய்வம் என்று காது அருகே உள்ள வாயில் இருந்து சில உபதேசங்களைக் கூறிவிட்டு வேகமாக ஆலயத்தின் உள்ளே சென்று மறைந்து விட்டார் அந்தப் பெண்மணி. அப்போது வாராஹி ஹோமத்தைத் தவறாமல் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் செய்து வந்ததும் இப்படி ஒரு சம்பவத்தில் வாராஹி தரிசனம் கொடுத்ததும் ஆச்சரியமாக இருந்தது.
- இந்த சம்பவம் அனைத்தும் மீனாட்சி நாடியில் எழுதப்பட்டிருந்ததுதான் அடுத்த ஆச்சரியம்.
- அடுத்து கரூர் சிவாலயத்தில் அடியார்கள் சூழ ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் வழிபாடு நடத்தி வெளியே வந்த போது முன் பின் அறிமுகம் இல்லாத தூய வெள்ளை ஆடை பூண்ட ஒரு சிவனடியவர் ஒருவர் வந்து நடு தார் ரோட்டில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்க அதைக் கண்டு பதற்றம் கொண்ட ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் உடனே தானும் அவருக்கு சாஸ்டாங்கமாக நமஸ்கரிக்க அந்த சிவனடியார் எந்த ஊரு...எனக் கேட்க நம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஒருவித மெய்யுணர்வில் அந்தியூர் ஆறுமுகப்பெருமான் என உரைக்க அடுத்த கணமே அடியேன் இவன் அடிமை...அடியேன் இவன் அடிமை என்று கரூர் கோவில் கோபுரத்தைக் காட்டி வேகமாக சிவாயலத்தில் உள்ளே சென்று அந்த சிவனடியார் மறைந்துவிட்டார்கள். ஸ்ரீஸ்கந்த உபாசகருடன் இருந்த அடியார்கள் அனைவரும் முருகா...முருகா...என்னே உன் விளையாட்டு என்று பக்தியில் திளைத்தார்கள்.
- இன்னும் சிறிது நேரத்தில் 20 வயது மதிக்கத்தக்க மிகவும் அழகான ஒரு வாலிப இளைஞர் ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம் வந்து நான் உள்ளே போகலாமா சுவாமி...எனக் கேட்க அதற்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் போலாம்..போலாம்...என்றும் எனக்குத் தெரியாது என்றும் மிகுந்த கோபமாக உரைக்க அடுத்த நொடி அந்த இளைஞர் வேகமாக சுப்ரமண்யர் ஆலயத்தை நோக்கி விரைந்து சென்று மறைந்து விட்டார்.
- இந்த இரண்டு சம்பவங்களும் கரூர் ஈசனும், அங்குள்ள முருகனும் நடத்திய திருவிளையாடல் என்று மீனாட்சி நாடியில் எழுதப்பட்டிருந்தது.
- திருவிடைக்கழியில் வந்தது முருகனே என்றும், பன்றி முக உருவில் காட்சி கொடுத்தது வாராஹி அம்மன் என்றும் அனைத்துமே சத்தியம் என்றும் மீனாட்சி நாடியில் எழுதப்பட்டிருந்தது.
- அவிநாசியில் ஒரு பழுத்த சிவண்டியார் ஒருவர் ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கு சில அதிசயங்கள் காட்டி பின் அவரே திருமுருகன் பூண்டி, பவானி, திருச்செங்கோடு சென்று திருச்செங்கோட்டில் ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கும் அவருடன் வந்த அனைத்து அடியார்களுக்கும் பஞ்சாட்சர மந்திர உபதேசமும், சித்தர்களுக்கே உரிய நேத்ர தீட்சையும் கொடுத்து பின் சென்றுவிட்டார்கள். இதுவரை அந்த காசி சுவாமிகளை எங்கும் ஸ்ரீஸ்கந்த உபாசகரால் காண முடியவில்லை. முருகப்பெருமானிடம் அருள்வாக்கில் கேட்டபோது சிவனும் முருகனும் இணைந்த அம்சம் அவர் என்று பதில் வந்தது.
- இப்படி இறைவனே பல்வேறு காட்சிகளையும், பல்வேறு திருவிளையாடல்களையும் ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கு நடத்தியதால்தான் ஜீவ நாடியில் தோன்றும் எழுத்துக்களைப் படித்து அனைவருக்கும் வாழ்வில் ஒரு உன்னத மாற்றத்தை ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களால் ஏற்படுத்த முடிகின்றது. எனவே ஜீவ நாடி என்பது எதோ ஒரு மாய மந்திர வித்தைகளால் வருவதில்லை. இறையருள் இருந்தால் மட்டுமே ஜீவ நாடி படிக்க முடியும் என்பதும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் ஒரு சாதாரண ஜோதிடன் இல்லை என்பதும் தெளிவாகின்றது. தொடரும்....
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக