- ஒருமுறை ஒரு ஆன்மீக மலர் புத்தகத்தில் வந்த அறிவிப்பு மூலம் மதுரையில் இருக்கின்ற ஸ்ரீமத் ஜெயவீர தேவா எனும் இராஜ யோகப் படிற்சியாளர் மற்றும் தேவி உபாசகர் பற்றி ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்குத் தெரிய வந்தது. அப்போது ஸ்ரீமத் ஜெயவீர தேவா
அவர்கள் ஜோதிடம்,மாந்திரீகம்,ஆருடம்,ஆழ்நிலை தியானம்,32 பூஜா பயிற்சி, யோகாசனம்
போன்ற அரிய ஆறு கலைகளைக் கற்பிப்பதாகவும் அதற்குரிய சீடர்களைத் தேர்வு செய்ய விண்ணப்பித்து
ஜாதகத்தையும் இணைத்து அனுப்பினால் அதற்கு உரிய தகுதி உண்டா எனப் பார்த்து தாம்
அந்த ஆறு கலைகளையும் ரகசியம் இல்லாமல் போதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
- அது கண்டு ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் முருகனிடம் உத்தரவு கேட்க முருகனும் உத்தரவு தர விண்ணப்பம் செய்தார்கள்.
- விண்ணப்பித்த உடனேயே ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் இதற்கு தகுதியானவர் என்றும் ஆறு கலைகளைப் ஒளிவு மறைவு இல்லாமல் போதித்து 95% எனும் தரத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார் என்றும் ஜோதிடக் கலைஞர், மந்திரோபதேசி, ஆருட ஆசான், இராஜ யோகி, தேவி உபாசகர் எனும் பட்டங்களோடு உரிய சான்றிதழ்களையும் கொடுத்து இந்த தமிழகத்தில் எனது சிறந்த மாணவர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் என்றும் பாராட்டி சான்றளித்தார்கள்.
- அதுமட்டுமில்லாமல் புகை பிடித்தல், பஞ்சமாபாதகங்கள் செய்தல்,மது அருந்துதல் புலால் உண்ணுதல் போன்றவை இல்லாமல் இருக்கும் உயரிய கொள்கை உடையவர்களுக்கே ஸ்ரீமத் ஜெயவீர தேவா அவர்கள் ஆறு கலைகளைக் கற்றுக் கொடுத்ததால் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் சிறிய வயது முதலே தூய்மையாக விளங்க இது காரணமாக அமைந்தது எனலாம்.
- அதேபோல் ஸ்ரீமத் ஜெயவீர தேவா அவர்கள் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு தனது அன்பின் மிகுதியால் தங்க முலாம் பூசப்பட்ட வினாயகர், குபேரன் ஆகிய சிறு விக்கிரகங்களையும் அதனுடன் இரண்டு யந்திரங்களையும் ஒரு நவகண்டி மாலையையும் ஒரு சிறு வேலும் கொடுத்து ஆசிர்வதித்தார்கள்.அதை ஒரு பொக்கிஷம் போல் போற்றிப் பாதுகாத்து இன்றுவரை ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் பூஜை செய்து வருகின்றார்கள்.
- ஒரு பெரும் அறிஞரிடம் முறையாக ஒளிவு மறைவு இல்லாமல் ஆறு கலைகளை ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் கற்றதனால் முருகன் அருளோடு ஞான அறிவும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்குக் கைகூடியது எனலாம்.
- முதல் குருவாகிய தவத்திரு வேலுச்சாமி அடிகளார் ஆசியும் இப்போது இரண்டாவது குருவாகி வித்தையைப் போதித்த ஸ்ரீமத் ஜெயவீர தேவா அவர்கள் ஆசியும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களை தனது 20ம் வயதிலேயே 80 வயதுடையவரின் ஞானம் ஏற்படக் காரணமானது எனலாம்.
- இந்த கலைகளைக் கற்ற பின்னர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் சொல்லும் வாக்குகள் 100% அப்படியே மிகத் துல்லியமாகப் பலித்து வர ஆரம்பித்தன.
- தனது ஜோதிடத்திறமையை நாளும் வளர்த்துக் கொண்ட ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் சென்னையில் உள்ள யுனிவர்சல் ரிசர்ச் அகாடமி மூலம் தேர்வு எழுதி ஜோதிட சாம்ராட், ஜோதிட பூஷன் ஆகிய இரு விருதுகளைப் பெற்றார்கள். ஜோதிட சாம்ராட் வாங்கிய முதல் சிறுவன் நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் மட்டுமே. அந்த விருதை தனது 20ம் வயதில் பொன்பரமகுரு ஐ.பி.எஸ் அவர்களின் கையில் பெற்றார்கள்.
- 2003ம் ஆண்டு முதல் அதாவது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் 22ம் வயது முதல் ஜோதிட, ஆன்மீக ஆய்வுக் கட்டுரைகளைப் பல்வேறு ஆன்மீக, ஜோதிட மாத இதழ்களில் எழுதி வந்தார்கள்.
- 2005ல் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் ஜோதிட சுடொரொளி, ஜோதிட ஒளி ஆகிய பத்திரிகைகளை தமது 24ம் வயதில் நடத்தி வந்தார்கள். பெருமாள் தரிசனம் எனும் இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார்கள்.
- 2003ல் பி.எஸ்.சி கணிப்பொறி அறிவியல் படிப்பை ஈரோட்டிலும், 2006ம் ஆண்டில் கோவையில் எம்.சி.ஏ. படிப்பையும் 2007ல் சேலத்தில் எம்.பில் படிப்பையும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் படித்து முடித்தார்கள்
தொடரும்....
Super jaga. All the lines are very excited and awesome
பதிலளிநீக்குSir, Very interesting.Praying God to bless me with an opportunity to meet you.
பதிலளிநீக்கு