வியாழன், 18 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-35

சிரவை சித்தி மகோற்கட கணபதி 
கணபதி துதி
உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி
     ஒண்கடலிற் றேனமுதத் துணர்வூறி
இன்பரசத் தேபருகிப்  பலகாலும்
     என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத்  தணைவோனே
     தந்தைவலத் தாலருள்கைக்  கனியோனே
அன்பர்தமக் கானநிலைப்  பொருளோனே
     ஐந்துகரத் தானைமுகப்  பெருமாளே.

சொர்க்கமாகிய வானவர் உலகத்தில் கற்பக மரம் காமதேனு
சிந்தாமணி போன்று என் உள்ளம் நெகிழ்ந்து, ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய இனிய அமுதம்போன்ற உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி,
                                                    
 இன்பமயமாகிய சாற்றினை நான் உண்ணும்படி பலமுறை என்னுயிரின் மீது ஆதரவு வைத்து அருள்வாயாக உன் தம்பியாகிய முருகப்பெருமானுக்காக வள்ளிமலையில் தினைப்புனத்திற்கு வந்தடைவோனே.
                            
ஞானப்பழம் பெறுவதற்காக தாய் தந்தௌயே உலகம் என்று கருதி தந்தை சிவனை வலம் செய்ததால் கையிலே அருளப்பெற்ற ஞானப்பழத்தை உடையவனே 
                             
அன்பர்களுக்கு வேண்டியது  நிலைத்து நிற்கும் பொருளாக விளங்குபவனே ஐந்து கரங்களையும் யானைமுகத்தையும் உடைய பெருமானே. 
                            
என்று விநாயகர் துதியாக இந்த திருப்புகழைப்பாடி இருக்கின்றார்.
அறு சமய வழிபாடுகளையும் வாரத்தின் ஆறு நாட்களில் வழிபட்டு ஏழாவது நாளான சனிக்கிழைமை அன்று சமயாதீதமாய் குரு வழிபாடு செய்வது கௌமார சமய நெறியாகும். அந்த வகையில் ஞாயிறு-சூரியன்,திங்கள்-சிவன்,செவ்வாய்-அம்பிகை,புதன்-விஷ்னு,வியாழன்-கணபதி,வெள்ளி-முருகன்,சனி-சமயாதீதமாய் குரு வழிபாடு என மிகச்சிறந்த சமய, சமரச, சமயாதீத நெறிகளைக் கடைபிடிப்பது கௌமார சமயம்.
இந்த வகையில் சித்தி மகோற்கட வினாயகர் கோவில், தண்டபாணிக்கடவுள் கோவில்,அவினாசியப்பர் கோவில், கருணாம்பிகை கோவில்,பாண்டுரங்கப் பெருமாள் கோவில்,சூரியன் கோவில் என அறு சமயக்கடவுள்களுக்கும் கோவில் கௌமார மடாலயத்தில் உண்டு. கௌமார நெறியின் முழு முதற் கடவுள் முருகப் பெருமான் என்பதால் கௌமார மடாலய கோவிலில் தண்டபாணிக்கடவுள் கோவில் நடு நாயகமாக விளங்க மற்ற ஐந்து சமயக் கடவுள் கோவில்களும் சுற்றிலும் இருக்கின்றது சிறப்பு. வாரத்தில் உள்ள ஏழு நாட்களும் மேற்படி அறு சமயக் கோவில்களை வழிபட்டால் அது சமயம் எனப்படும். இந்த அறு சமயக் கடவுள்களிடம் எந்தவித பேதமும் பாராமல் வழிபடுவது சமரசம் எனப்படும். இந்த அறுசமயக் கடவுள் வழிபாட்டின் முதிர்ச்சியாக குருவே பரம்பொருள் என உணர்ந்து கௌமார நெறியான குரு நெறியைக் கொண்டு வழிபடுவது சமயாதீதம் எனப்படும். அந்த வகையில் கௌமார மடாலயத்தில் அறு சமய ஆறு நாள் வழிபாடு முடித்து ஏழாவது நாளுக்கு சனிக்கிழமைக்கு உரிய வழிபாடாகிய சமயாதீத நெறியான குருவே பரம்பொருள் எனும் வகையில் முதல் மூன்று சந்நிதானங்களின் சமாதி ஆலயங்கள் மடாலய சமாதி வளாகத்தில் இருக்கின்றன. இது சனிக்கிழைமை வழிபாட்டிற்கு சிறந்ததாகும். சமய,சமரச,சமயாதீதம் எனும் மூன்று முக்கிய கௌமாரக் கோட்பாடுகளை ஒட்டு மொத்தமாகக் கொண்டதே கோவை சிரவை கௌமார மடாலயம்.
அந்த அறு சமய வழிபாட்டின்படி இன்று வியாழக்கிழைமை விநாயகருக்கு உகந்த நாள். எனவே கணபதிக்கு உரிய இந்த திருப்புகழை ஏதேனும் ஒரு விநாயகர் கோவிலில் துதித்து காணாபத்ய சமயக் கடவுளாகிய கணபதியை வணங்கி கணபதி காட்டிய நெறியாகிய தாய் தந்தையர் வழிபாடு எனும் படி உங்கள் தாய் தந்தையிடம் அவர்கள் மனம் குளிரும்படி இன்சொல் பேசி இன்முகம் காட்டி நல்லாசியினைப் பெற்றால் ஏழேழ் ஜென்மங்களாக செய்து கர்மவினைகள் நீங்கி வாழ்வில் உடனே ஒரு நல்ல மாற்றம் தரத் துவங்கும் என்று நமது ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வந்துள்ளது. 
                               
எனவே கௌமாரபயணம் வாசகர்கள் அனைவரும் இதை ஏதேனும் ஒரு வியாழன் அன்றோ அல்லது முடிந்தவர்கள் ஒவ்வொரு வியாழன் அன்றோகூட கடைபித்து வர முயற்சி செய்யலாம். பலம்100% என்பதை அனுபவத்தில் பார்க்கலாம். இது போன்ற திருப்புகழின் பெருமைகளை அனைவருக்கும் பகிர்ந்து குருவே பரம்பொருள் எனும் கௌமார சமயத்தின் நெறியைப் போற்ருங்கள். பெருமை அடைவீர்கள். பூசை இல்லாதவர்க்கு புகழ் இல்லை என்பது வண்ணச்சரம் தண்டபாணி சுவாமிகளின் நானிலைச்சதகம் கூறுவதால் பூஜை செய்ய முயற்சி எடுங்கள். நன்றி.
               ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரம வலம்புரி செல்வ கணபதி
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                               
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்

ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
            ஓம்ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                   சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக