பண்ணாரி மாரியம்மன்
- ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் பாட்டி திருமதி.குருவாயம்மாள் அவர்களுக்கு தீராத குதிகால் வலி ஒன்று நீண்ட காலமாகவே இருந்து வந்தது. ஒருமுறை காலில் அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டு அதேபோல் செய்ய ஏற்பாடு ஆனது. அப்போது மருத்துவ மனையில் ஒரு பெண்மணி இங்கு பண்ணாரி அம்மன் படம் உள்ளது அதை வணங்கினால் உனக்கு அறுவை சிகிச்சை செய்யும் பயம் போய்விடும் என்று சொல்ல பாட்டியும் அவ்விதமே வணங்க கனவில் ஒரு பெண் சத்யமங்கலத்தில் இருந்து வருவதாகக் கூறி காதில் துளசி இலைச் சாறு விட்டு செல்வதாகவும் காட்சி கண்டார்.அதன் பின்பு பயம் ஏதும் இல்லாமல் அறுவை சிகிச்சை முடித்து பின் பூரண குணத்துடன் வீடு திரும்பினார்.
- · பண்ணாரி அம்மன் அருளால்தான் தமக்குக் குணம் கண்டது எனக் கருதி ஒருமுறை அந்த பண்ணாரி சென்று அம்மனைத் தரிசிக்க வேண்டும் எனக்கருதி தனியாகச் செல்ல வேண்டுமே என்று துணைக்கு எல்லோரையும் கூப்பிட்டார். யாரும் வர வில்லை என்பதால் தாமே தனியாகவே செல்வோம் என்று புறப்பட்டு விட்டார்.
- · அந்தியூரில் இருந்து சத்தியமங்கலத்திற்கு பேருந்தில் ஏறி அமர்ந்த சில நிமிடங்களிலேயே வெள்ளைப் புடவை கட்டிய ஒரு பெண்மணி முன் பின் அறிமுகம் இல்லாதவர் இவர் அருகில் வந்து அமர்ந்தார்.
- · பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கும்போது அருகில் இருந்த அம்மையாரும் இந்த அம்மையாரும் சத்யமங்கலத்திற்கு சீட்டு எடுத்தனர்.
- · பின்பு சத்யமங்கலம் வந்த பின்பு பாட்டி அவர்கள் பண்ணாரி செல்லும் பேருந்தில் ஏறி அமர அவர் இருக்கைக்கு அந்தியூரில் ஏறிய அதே அம்மையார் வந்து அமர்ந்தார். அப்போதுதான் குருவாயம்மாள் அவர்கள் அந்த பெண்ணிடம் தாங்கள் பண்ணாரிதான் செல்கிறீர்களா? என்க் கேட்க ஆம் என்று மட்டும் பதில் வந்தது வேறு பேச்சு எதுவும் இல்லை.
- · பண்ணாரி சென்றவுடன் அந்த அம்மையார் பேருந்தை விட்டு வேகமாகச் சென்று விட்டார். சரி தரிசனம் செய்வோம் என்று குருவாயம்மாள் அவர்கள் சிறப்பாக அம்மனை தரிசனம் செய்து வீட்டிற்கு 5 ரூபாயில் பண்ணாரி மாரியம்மனைப் போலவே உள்ள ஒரு சிறிய மண் சிலையை ஆன்மார்த்த வழிபாட்டிற்காக வாங்கி தன் பையில் வைத்துக் கொண்டார்.
- · மீண்டும் பேருந்து ஏறி சத்யமங்கலத்திற்கு பயணச்சீட்டு வாங்கி அமர்ந்தார். பேருந்து எடுக்கும் நேரத்தில் அதே வெள்ளைப் புடவைப் பெண்மணி வேகமாக வந்து இவரது இருக்கைக்கு அருகே அமர்ந்து அந்தியூர் வரை வந்துவிட்டு அந்தியூரில் வேகமாக இறங்கிச் சென்று விட்டார். வந்தது யார் என்ற குழப்பம் நீடித்து எப்படியோ துணை இல்லை என்று தடுமாறும் போது அந்த பண்ணாரி அம்மனே இப்படி பெண் ரூபத்தில் வந்ததோ என்று கண்ணீர் மல்கி அந்த அம்மன் சிலையைக் கண்களில் ஒத்திக்கொண்டு வீட்டில் வைத்துப் பூஜித்து வந்தார் குருவாயம்மாள் அவர்கள். தொடரும்....
பண்ணாரி கோவில்
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
The above article said it's clear truth. Because I know 13 years of the shri Skanda murthi upaskar.all these had done for God's blessed.
பதிலளிநீக்கு