வியாழன், 11 பிப்ரவரி, 2016

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு பகுதி-8

                                                   
  • அடுத்து அதே ஆண்டில் 16 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு பெண்மணிக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் எனக்கூறி விபூதி கொடுத்த அடுத்த மாதமே அந்தப் பெண்மணி கருவுற்று சுவாமிகள் சொன்னது போலவே ஆண், பெண் எனும் இரட்டைக் குழந்தையைப் பெற்று எடுத்து அந்த இரு குழந்தைகளுக்கும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் முன்னிலையில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் பாட்டி திருமதி குருவாயம்மாள் அவர்கள் கார்த்திக் கார்த்திகா எனும் முருகப் பெருமானின் பெயர் வைத்து ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் ஆசியிட்டார்கள். இந்த பெண்மணிக்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் தம்பி தைப்பூச தீர்த்தக்குட உற்சவத்தில் புத்திரபாக்கிய கனியும் கொடுத்தார்கள்.
  •        இது போல் 100க்கும் மேற்பட்ட குழந்தை பாக்கியம் அருளப்பட்டு முருகனின் திரு நாமம் சூட்டப்பட்டுள்ளது. இன்னும் இந்த அதிசய நிகழ்வுகள் தொடர்கின்றது.
                                       
  • ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் தனது 12ம் வகுப்பு படிப்பை முடித்து இராசிபுரத்தில் நுழைவுத்தேர்வு பயிற்சி எடுக்க சில காலம் தங்கி இருந்தார்கள். அப்போது சுகுமார் என்பவர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் சக்தியை உணர்ந்து ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு ஒரு சீடன் போல் பல பணிவிடைகள் செய்தார். அந்த சுகுமார் அவர்களுக்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் அவரது எதிர்காலத்தைப் பாடல் வடிவில் எழுதிக் கொடுத்துவிட்டு மீண்டும் வீடு திரும்பினார்கள். அதன்பின்பு நீண்ட நாள் கழித்து ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் சொன்னது சுகுமாருக்கு அப்படியே நடந்துள்ளதை சுகுமாரின் தந்தை கண்டு வியப்படைந்து ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களைத்தேடி அந்தியூர் வந்தார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் சுகுமார் இந்த குறிப்பிட்ட வயதில் காணாமல் போவான் அப்போது என்னை வந்து சுகுமாரின் பெற்றோர் சந்திப்பர் என்று எழுதி இருந்ததுதான் சிறப்பான ஆச்சரியம். அப்போது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் சுகுமாரின் பெற்றோர்களுக்கு உன் பிள்ளை மீண்டு வருவான் என விபூதி கொடுத்து ஆசியிட்டார்கள். அப்படியே சில மாதங்களில் சுகுமார் மீண்டு வந்து இப்போது மிக நல்ல நிலையில் வாழ்ந்து வருகின்றான்.
  • சுகுமாரின் பெற்றோர்கள் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களைப் பற்றி விசாரித்து வருகின்ற வழியெல்லாம் கேட்டு வந்தபோது ஊர் முழுவதும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களைப் பற்றித் தெரிய வந்தது. இந்த மூன்று சம்பவங்களும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் மீது முருகப்பெருமான் அருள்பாலிப்பதை மக்கள் உணர்ந்து கொள்ள ஏதுவாக இருந்தது.
  •   முருகன் அருள் முழுமையாக வந்துவிட்டது ஒருவர் முகத்தைப்பார்த்தே முக்காலமும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் கூறுவதைப் பார்த்த பாட்டி குருவாயம்மாள் அவர்கள் ஜோதிடத்தை முறையாகப்படிக்குமாறு கூறி பண உதவி செய்தார்கள்.
                                     
  •     ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு சிறிய வயது முதலாகவே நூல்களைப் படிக்கும் பழக்கம் அதிகம். தன்னிடம் எந்த தொகை கிடைத்தாலும் அத்தனைக்கும் நூல்களை வாங்கி படித்து அந்த நூல்களை சேமித்து வைப்பது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் வழக்கமாக இருந்தது. தொடரும்...

                          ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக