ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு பகுதி-7
- தைப்பூசத்தின்
முந்தைய நாளன்று தீர்த்தக்குடம் எனும் பிரதான கலசத்தை ஸ்ரீஸ்கந்த
உபாசகர் அவர்களின் தம்பி திருவாளர்.சுப்பிரமணியம்
அவர்கள் எடுத்து நீண்ட காலமாகக் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கிய கனி கொடுத்து பூஜை நடக்கும்.இன்றளவும்
இந்த தீர்த்த உற்சவ பூஜைக்கு கருடன் வந்து மூன்று முறை வட்டமிடுவது தவறாமல்
நடக்கின்றது. இந்த நிகழ்வின் மூலம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்குழந்தைகள் முருகன் அருளால் பிறந்திருக்கின்றன.
- தைப்பூசக்
கொடி ஏற்றி பதினைந்து நாட்கள் படி தீபம் ஏற்றுதல் எனும் நிகழ்வு அருள்வாக்கில்
சொல்லப்பட்டு ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் கடைபிடிக்கப்படுகின்றது. ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் இந்த பதினைந்து நாட்களில் ஏதேனும் மூன்று நாட்கள் விடுமுறை நாளாக இருந்தால் இரவில் கந்த புராண
சொற்பொழிவுகளை அடியார்கள் சூழ கதா
காலட்சேபம் நடத்துவார்கள்.இதைக் கேட்பதுக்கென்றே ஒரு கூட்டம் வரும்.இப்படி அமாவாஸை பூஜையும், தைப்பூச உற்சவமும் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்தது.
- சில
மாதங்களின் பூஜைக்குப் பின்னர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் பாட்டிக்கு கால் வலி குணமாக ஆரம்பித்து பின்பு
சிறுகச் சிறுக வலி குறைந்து எந்தவிதமான மருந்து மாத்திரைகள் இல்லாமல் முருகனின் திருநீறு மூலமே பூரண குணம் ஏற்பட்டது. மருத்துவர்கள் சோதனை
செய்து பார்த்துவிட்டு இது இறை அதிசயம் வளர்ந்து வந்த எலும்பு வளராமல் நின்று
விட்டது. இனி அறுவை சிகிச்சை தேவையில்லை என்றனர். இன்று வரை அந்த வலி போன இடம்
தெரியவில்லை.இதுதான் ஸ்ரீஸ்கந்த உபாசகர் கூறிய முதல் அருள்வாக்காகும். அது அப்படியே பலித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
- அதேபோல் ஸ்ரீஸ்கந்த
உபாசகர் அவர்கள் தனது 13 வயதிலேயே ஒருவரின் முகத்தைப் பார்த்தே முக்காலத்தையும்
உரைத்து விடுவார்கள்.
- ஸ்ரீஸ்கந்த
உபாசகர் அவர்கள் தனது உள்ளங்கையைப் பார்த்தே தான் செல்லாத இடங்களுக்குக் கூட
நேரில் சென்று பார்த்தமாதிரியே உரைத்துவிடுவார்கள். இது இன்றும் அப்படியே தொடர்கின்றது. அதற்கு ஆயிரம் உதாரணங்களைச் சொல்லலாம். இப்படி தனது உள்ளங்கையைப் பார்த்தும், எலுமிச்சம்பழத்தைப் பார்த்தும் அருள்வாக்கு உரைத்து ஆயிரக்கணக்கான அதிசயங்கள் அரங்கேற்றம் ஆகி வந்தது. ஒரு நாள் அருள்வாக்கில் இந்த அருள்வாக்கு சித்தி சுவடியில் தோன்றும் எழுத்துக்களைப் படிக்கும் சித்தியைத் தரும் என்றும் அதற்கு ஒரு ஓலைச்சுவடிக் கட்டும் ஒரு எழுத்தாணியும் வைத்து பூஜை செய்யுமாறு முருகப்பெருமான் உரைத்தார். அதேபோல் ஒரு அடியவர் மூலம் இப்போது ஜீவ நாடி ப்டிக்கப்படும் ஒலைச்சுவடி கட்டு தேடி வந்தது. அதையும் ஒரு எழுத்தாணியையும் வைத்து சில மாதங்கள் பூஜை செய்யப்பட்டன. அந்த ஓலைச்சுவடியில் எந்த எழுத்துக்களும் எழுதி இருக்கவில்லை.
- நாளடைவில் ஜீவ நாடி ஓலைச்சுவடி படிக்கும் கலை ஸ்ரீஸ்கந்த உபாசகருக்குக் கைகூடி நாடியில்
வரும் எழுத்துக்களை வைத்தே எதிர்காலம் உரைத்தார்கள். இன்றும் அருள்வாக்கிற்கும் ஜீவ நாடிக்கும் எந்தவித வித்தியாசங்களும் இல்லை. ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் சுவடி இருந்தாலும் இல்லாவிட்டாலும் முருகப் பெருமான் மற்றும் சித்தர்களின் சூட்சும எண்ணங்களைக் கிரகித்து பாடலாக உரைத்துவிடுவார்கள். அதில் என்ன ஆச்சரியம் என்றால் கடந்த 20 ஆண்டுகளில் உரைத்தால் உரைத்ததுதான். அது அப்படியே இன்றுவரை 100% பலித்து வருகின்றது என்பதை அனைவருமே அறிவார்கள்.ஆனால் அவ்வளவு எளிதில் ஒருவருக்கு ஜீவ நாடி கேட்கும் அமைப்புக் கிட்டுவதில்லை. காரணம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு ஜீவ நாடி உரைப்பது தொழில் அல்ல. இரண்டாவது ஆலயப் பணி,பத்திரிக்கைப் பணி, கல்லூரிப்பணி, ஆலய வழிபாட்டுப் பயணம், நூல்கள் எழுதுதல், குடும்பப் பணிகள் என எப்போதுமே பணிச்சுமையாகவே இருப்பதுதான். இத்தனை பணிச்சுமைகளுக்கும் இடையிலும் முருகன் அருளால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜீவ நாடி உரைத்து மக்களுக்கு சேவை செய்வதில் மகேசன் சேவை போல் கருதி ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் செயல்பட்டு வருகின்றார்கள்.
- ஸ்ரீ
ஞானஸ்கந்த மூர்த்தி தனது திருவிளையாடல்களைத் தொடங்க ஆரம்பித்தார். ஸ்ரீஸ்கந்த
உபாசகர் அவர்கள் தோட்டத்திற்கு கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் வந்து சில நாட்கள்
தங்கி கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபடுவார்கள் அப்படி ஒரு நாள் ஒரு பெண் துணி
துவைக்கும்போது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் வழிபடும் மேடையில் உள்ள
முருகப்பெருமான் சுயம்பு உருவின் மீது துணி துவைக்கும் அழுக்குத்தண்ணீர் பட்டு
விடடது. அந்த அளவில்தான் மேடை இருந்தது. அதன் பின்பு அந்த நாளே கரும்பு வெட்டும் பணியும் முடிவடைந்து அடுத்தவர்
தோட்டத்திற்கு அவர்கள் சென்றனர். அந்த துணி துவைத்த பெண்மணி மட்டும் ஒருவித நோய்
வாய்ப்பட்டது போல் படுத்த படுக்கையாக ஒரு வாரம் படுத்து விட்டார். எல்லா
வைத்தியமும் செய்தும் பலன் இல்லாமல் அந்த பெண்ணின் கணவன் கனவில் ஸ்ரீஸ்கந்த
உபாசகர் அவர்கள் வணங்கி வரும் முருகன் ஒரு முதியவன் வடிவில் சென்று தன்னை வந்து
கடலை சர்க்கரை வைத்து வணங்கி தீர்த்தமும் விபூதியும் ஸ்ரீஸ்கந்த உபாசகர்
அவர்களிடம் வாங்கி உன் மனைவிக்கு கொடு நோய் நீங்கும் என்று உரைக்க அந்த கணவன்
உடனடியாக ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் தோட்டத்திற்கு வர அப்போது ஸ்ரீஸ்கந்த உபாசகர்
அவர்கள் தனது இள நிலை படிப்புக்குக் கல்லூரி சென்றுவிட்டு மாலை வீடு திரும்பும்
வரை காத்திருந்து கடலை சர்க்கரை வைத்து படைத்த உடனேயே ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் அருள்வாக்கில் பெண்மணி செய்த செயலைச் சொல்லியும் அதேபோல் அவர்கள் ஊரில் உள்ள விஷயங்களையும்
அவர்கள் வீட்டில் உள்ள பொருள்களையும் நேரில் சென்று பார்த்து வந்தது போலவே உரைத்து
விபூதி, தீர்த்தம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். அந்த தீர்த்தமும் விபூதியும்
பெற்ற சில மணி நேரத்திலேயே அந்த பெண்மணி தனது சுய உணர்வை அடைந்து இன்னும் நல்ல
நிலையில் வாழ்ந்து வருகிறாள். . இந்த சம்பவம் 2001 ம் ஆண்டு நடந்தது.இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கு உட்பட அவர் குடும்பத்தினருக்கும் இந்த பெண் துணி துவைத்த விஷயம் தெரியாது. அதேபோல் அந்த பெண்ணின் கணவனுக்கும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் பற்றித் தெரியாது.இந்த சம்பவம் நீண்ட நாட்களுக்கு பெரும் பர பரப்பாகப் பேசப்பட்டது. முருகப்பெருமான் அங்கு இருக்கின்றார் என்று இந்த சம்பவம் மற்றும் பாட்டியின் கால்வலி நீக்கிய சம்பவம் ஆகிய இரண்டு சம்பவங்கள் மூலம் நிரூபிக்கத் தொடங்கினார். தொடரும்...
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
Very nice article
பதிலளிநீக்குமேலே சொன்னது எல்லாம் அந்தனைம் உன்மை.எண் என்றால் நான் அவ௫டன் 13 வ௫டமாக பழகி இருக்கிறேன்,இது எல்லாம் அந்த ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி அ௫ள் அவ௫டன் இ௫க்றதுணாள.
பதிலளிநீக்குஓங்கட்டும் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.
The above article said it's clear truth. Because I know 13 years of the shri Skanda murthi upaskar.all these had done for God's blessed.
பதிலளிநீக்குஇது அனைத்தும் ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் உள்ள ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியின் திருவிளையாடல்கள். நாங்கள் கேரளாவில் இருக்கிறோம். எங்கள் வீட்டில் பூஜை அறையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் போட்டோவையும் மற்ற பொருட்களையும் ஸ்கந்த உபாசகர் அவர்கள் அமாவாசை அருள் வாக்கில் இது போல் உரைத்தார். ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
பதிலளிநீக்கு